முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்து தற்காலிக அதிபராக தலைமை நீதிபதி பதவி ஏற்பு

வியாழக்கிழமை, 4 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

கெய்ரோ,ஜூலை.05 - நைல் நதியின் நன்கொடை என்று அழைக்கப்படும் எகிப்து நாட்டின் தற்காலிக அதிபராக அந்த நாட்டு சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி அடிலி மன்சோவர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். எகிப்து நாட்டின் அதிபராக கோஷினி முபாரக் 30 ஆண்டுகள் பதவி வகித்தார். அவருக்கு எதிராக எகிப்தில் மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் பதவி விலகினார். அவருக்கு அடுத்து முகமத் முர்சி அதிபராக பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்று சுமார் ஒன்றரை ஆண்டுகாலம்தான் ஆகிறது. இவர் சீர்திருத்த திட்டங்களை செயல்படுத்து முயன்றார். இதற்கு எகிப்து மக்கள் ஆதரவு கொடுக்கவில்லை. மேலும் முர்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். நாட்டில் குழப்பம் ஏற்படவே முர்சி பதவி விலகுமாறு ராணுவத்தினர் கேட்டுக்கொண்டனர். இதை ஏற்க முர்சி மறுத்துவிட்டார். இந்தநிலையில் நேற்று முர்சியை ராணுவம் பதவி நீக்கம் செய்துவிட்டது. அவருக்கு பதிலாக தற்காலிகமாக எகிப்து நாட்டு சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி மன்சோவர் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். இவர், இன்னும் ஒரு சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தலை நடத்தி ஜனநாயக முறைப்படி புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படும்வரை பதவியில் நீடிப்பார் என்று தெரிகிறது. அதிபர் பதவியில் இருந்து முர்சி நீக்கப்பட்டதை அந்த நாட்டு மக்கள் வரவேற்றுள்ளனர். கூட்டம் கூட்டமாக கூடி ஆட்டம் பாட்டம் பாடினர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கினர். தலைநகர் எகிப்து மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நகரான அலெக்ஸாண்டரியா ஆகிய நகரங்களில் மக்கள் பெரும் ஆரவாரம் செய்தனர். முர்சி பதவி நீக்கம் செய்யப்பட்டதை திருவிழா மாதிரி கொண்டாடினர். முர்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டதை ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா மற்றும் பெரிய நாடுகள் எதுவும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்