முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிலீக்ஸ் மீதான தடையை நீக்கியது மாஸ்டர் கார்டு

வியாழக்கிழமை, 4 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், ஜூலை. 5 - அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்தில் அம்பலப்படுத்தியதால் அந்த இணையதளத்துக்கு மாஸ்டர்கார்டு மூலம் நன்கொடை செலுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை அலற வைத்த இணையதளம் விக்கிலீக்ஸ்.  உலகம் முழுவதும் அமெரிக்க தூதரகங்கள் என்னென்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. பிற நாடுகளின் தலைவர்களை எப்படியெல்லாம் விமர்சித்தது என்பது போன்ற பல்லாயிரக்கணக்கான தகவல்களை விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே தமது தளத்தின் மூலம் வெளியிட்டார். 

இதனால் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் செம கடுப்பாகிப் போகின. அசாஞ்சே மீது வெளிநாடுகளில் பாலியல் வழக்குகள் தொடரப்பட்டு அவரை கைது செய்யும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில் 2010 ம் ஆண்டு பேபால், விசா, பேங்க் ஆப் அமெரிக்கா, வெஸ்டர்ன் யூனியன்ஸ் மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவற்றின் மூலமாக விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு நிதி உதவி செய்வது தடை செய்யப்பட்டது. இதனால் விக்கிலீக்ஸ் செயல்பாடுகள் முடங்கும் நிலைக்குப் போனது. இந்த பொருளாதாரத் தடையை அசாஞ்சே மிகக் கடுமையாக விமர்சித்தும் இருந்தார். இதனிடையே அசாஞ்சேயின் விக்கிலீக்ஸ் தளத்துக்கு நன்கொடை செலுத்துவதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை மாஸ்டர் கார்டு நீக்கியிருக்கிறது என்று விக்கிலீக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்