முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேனல் 4-ன் ஆவணப்படம் திரையிட்ட இயக்குனர் கைது

வியாழக்கிழமை, 4 ஜூலை 2013      சினிமா
Image Unavailable

 

கோலாலம்பூர், ஜூலை. 5 - ஈ்ழப் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை அரசு அரங்கேற்றிய இனப்படுகொலை குறித்த சேனல் 4-ன் ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்ட அதன் இயக்குநர் கலேம் மெக்ரே உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர். வட இலங்கையில் ்ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் மட்டும் சிங்கள ராணுவத்தால் லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள், விடுதலைப் புலிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். மனித இனத்துக்கு எதிரான கொடுமையான ரசாயன ஆயுதங்களை பிரயோகித்து இந்த இனப்படுகொலையை அரங்கேற்றினர். சாட்சியில்லா இனப்படுகொலை என நினைத்துக் கொண்டிருந்த இலங்கை அரசுக்கு பெரும் பீதியைக் கொடுத்தது சேனல் 4-ன் இந்த ஆவணப்படம். 

இரண்டு பகுதிகளாக வெளியான இந்த ஆவணப்படம்தான், ்ஈழத்தில் மனித உரிமைக்கு எதிராக நடந்தேறிய அத்தனைக் கொடுமைகளையும் உலகுக்கு அம்பலப்படுத்தியது. இந்தப் படம் இந்தியாவில் தலைநகர் டெல்லியில் திரையிடப்பட்டது. அடுத்து மலேசியாவில் திரையிட முயன்றனர். கோலாலம்பூரில் உள்ள சைனிஸ் அசம்பலி ஹோலில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. ஆவணப்படத்தை காட்சிப்படுத்தும் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்த மூன்று ஏற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆவணப்படம் திரையிடப்படுவதற்கு இலங்கை தூதரகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் போலியானவை எனவும், இலங்கையின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் உள்நோக்கம் கொண்டது என்றும் ஆட்சேபித்ததால், மலேசிய அரசு கலேம் மெக்ரே உள்ளிட்ட நால்வரை கைது செய்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்