முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடன் கொல்லப்பட்டதால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு

வியாழக்கிழமை, 5 மே 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,மே.5 - பின்லேடன் கொல்லப்பட்டதால், பாகிஸ்தானில் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டை பழி தீர்ப்போம் என்று தலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், அதிபர் சர்தாரி திணறி வருகின்றார்.  பின்லேடன் பாகிஸ்தான் ராணுவ முகாமுக்கு அருகே 5 வருடமாக தங்கிவந்துள்ளான். ஆகவே, அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தான் அவனை இங்கு தங்க வைத்திருக்கக் கூடும் என்று அமெரிக்கா உறுதியாக நம்புகின்றது. அதனால் தான், பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்காமலேயே, அமெரிக்க ராணுவ வீரர்கள் நடவடிக்கையில் இறங்கினர். அத்துடன், பாகிஸ்தானுக்கு எதிராக வேறு சில நடவடிக்கையில் இறங்கவும் அமெரிக்கா திட்டம் வகுத்துள்ளது. தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக, ஆண்டுக்கு ரூ.5,000 கோடியை இலவசமாக அமெரிக்கா வழங்கி வருகின்றது. அந்தத் தொகை நிறுத்தப்படும் என தெரிகின்றது. ஆனால், பாகிஸ்தானுக்கு தெரியாமல் அமெரிக்க ராணுவம் இவ்வளவு தூரம் வந்து தாக்கியிருக்கமுடியாது என்று தீவிரவாதிகள் எண்ணுகின்றனர். ராணுவ முகாமுக்கு அருகே தான் பின்லேடன் வீடு இருந்தது. அங்கு நடந்த துப்பாக்கி குண்டு சத்தம் ராணுவவீரர்களுக்கு கேட்காமல் இருந்திருக்காது. ஆகவே, இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் அரசுக்கும், நிச்சயம் பங்கு உண்டு என அவர்கள் கருதுகின்றார்கள். ஆகவே, அமெரிக்காவையும், பழிவாங்குவோம் என்று தலிபான் தீவிரவாதிகள் கூறியுள்ளார்கள். இவர்கள், பின்லேடனின் அல்-கொய்தாவுடன் ஒன்றாக கலந்தவர்கள் பின்லேடனை கண்டுபிடிக்க அமெரிக்காவுக்கு 10 ஆண்டுகள் ஆகின. ஆனால், 3 மாதத்திலேயே நாங்கள் அமெரிக்காவையும், பாகிஸ்தானையும் பழிவாங்வோம்  என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago