முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த 2 பேர்

வியாழக்கிழமை, 5 மே 2011      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை,மே.5 - மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் கைத்துப்பாக்கியுடன் நுழைந்த இருவரை போலீசார் சுற்றி வளைத்தனர். அனுமதியின்றி துப்பாக்கி எடுத்து வந்த இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த செல்கின்றனர். கோயில் பாதுகாப்புப்பணிக்காக ஒவ்வொரு கோபுர வாயில்களிலும் எஸ்.ஐ. உள்பட 5  போலீசார் 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை 60 வயது மதிக்கத்தக்க இரு முதியவர்கள் கிழக்கு கோபுரம் வழியாக கோயிலுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் சோதனை செய்தபோது, ஸ்கேனர் கருவி திடீரென அபாய ஒலி எழுப்பியது. உடனடியாக இருவரையும் தனியாக அழைத்துச் சென்ற போலீசார் முழுமையாக சோதனை நடத்தினர். அப்போது, ஒரு முதியவர் இடுப்பில் கைத்துப்பாக்கி செருகி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. துப்பாக்கியை பறிமுதல் செய்து, இருவரையும் கோயில் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர். வெடிகுண்டு தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்பையா, துப்பாக்கியை கைப்பற்றி ஆய்வு செய்தார். விசாரணையில் துப்பாக்கி வைத்திருந்தவர் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த தங்கவேலு என்றும், அவருடம் வந்தனர் வெள்ளையன் என்றும் தெரிந்தது. போலீசார் கூறுகையில், மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனுமதியின்றி துப்பாக்கி எடுத்து வந்த இருவரிடமும் விசாரணை நடத்துகிறோம். அய்யம்பாளையம் காடுகளில் உள்ள கரடி உள்ளிட்ட விலக்குகளிடம் இருந்து பாதுகாக்க துப்பாக்கி வைத்திருந்தோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்