முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கெட்டை தக்க வைப்பது எங்களது வியூகம் - பாண்டிங்

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

அகமதாபாத், பிப். 23 -  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை விக்கெட்டை தக்க வைப்பது எங்களது வியூகமாகும் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்தார். மேலும், உலகக் கோப்பை போட்டிகளில் மீதமுள்ள ஆட்டங்களில் 25 ஓவர் முதல் 30 ஓவர் வரை விக்கெட்டை தக்க வைத்து சுழற் பந்து வீச் சை சமாளிப்பது முக்கியமானது என்றும் கேப்டன் ரிக்கி கூறினார். 

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி  பெற்ற பிறகு குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்தில் நிருபர்களைச் சந்தித்த கேப்டன் பாண்டிங் அவர்களது கேள்விக்கு பதில் அளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை சந்தித்தது. அகமதாபா த்தில் நடந்த இந்த ஆட்டத்தில் ஆஸி. அணி 91 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் விக்கெ ட்டை தக்க வைப்பது பவர்பிளேயின் போது உதவிகரமாக இருக்கும் என்றும் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் குறிப்பிட்டார். 

அகமதாபாத் ஆட்டம் குறித்து அவரிடம் கேட்ட போது, இந்த ஆடுகளம் நன்றாக இருந்தது. நாங்கள் விக்கெட்டை தக்கவைத்தோம். இத னால் நல்ல ஸ்கோரை எட்டினோம் என்றார் அவர். 

இருந்த போதிலும், மொடேராவில் உள்ள ஆடுகளம் மந்தமாக இருந் தது என்றும் இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது சிரமமாக இருந்த து என்றும் ரிக்கி தெரிவித்தார். 

மேலும், ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர்கள் உலகின் சிறந்த பெளலர்கள் என்றும் எந்த ஒரு அணிக்கும் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்றும் நடப்பு சாம்பியனான ஆஸி.யின் கேப்டன் கூறினார். 

ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் முன்னணி வீரரான ஜான்சன் 9.2 ஓவர்களை வீசி 19 ரன்னை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டை கைப்ப ற்றினார். இது அவரது சிறப்பான பந்து வீச்சு என்று ஏ.ஏ.பி.க்கு அளித் த பேட்டியில் பாண்டிங் தெரிவித்து இருக்கிறார். 

தவிர, மூத்த வீரரான பிரட்லீ 1 விக்கெட்டையும், ஷான் டெய்ட் 2 விக் கெட்டையும் வீழ்த்தினார்கள். அவர்களது பெளன்சர் பந்துகள் ஜிம் பாப்வே வீரர்களின் ஹெல்மெட்டை தாக்கியது. திடீர் பம்பர்களால் நிலைகுலைந்த அந்த அணி வீரர்கள் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெ ளியேறினார்கள். 

ஆஸி. அணிக்கு மேலும் முன்னேற்றம் தேவை என்றும், முக்கியமாக சுழற் பந்து வீச்சிற்கு எதிராக பேட்ஸ்மேன்கள் நன்கு ஆட வேண்டும், என்றும் ரிக்கி கூறினார். ஆஸி. அணி உலகக் கோப்பையில் தொடர்ந் து 31 ஆட்டத்தில் வெற்றி பெற்று உள்ளது. 

ஆஸி. வேகப் பந்து வீச்சாளர்கள் ரிவர்ஸ் சுவிங் பந்துகளை நேரத்திற்கு ஏற்றார் போல வீசினால் எதிரணியினர் அதனை சமாளிப்பது சிரமம் என்றும் தெரிவித்தார். மேற்படி 3 வீரர்களும் மணிக்கு 150 கி.மீ. வேக த்தில் பந்து வீசும் திறன் படைத்தவர்கள். 

அதே போல ஆஸி.யின் வேகப் பந்து வீச்சாளர்கள் ஷார்ட் பால்கலை யும் நன்கு வீசினால் எதிரணியினர் மிரண்டு விடுவார்கள் என்றும் மொத்தத்தில் அவர்கள் நன்கு பந்து வீசினால் இந்த உலகக் கோப்பையி ல் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித் தார். 

ஆஸி.யின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஷான் டெய்ட் கடந்த 2007 -ம் ஆண்டு உலகக் கோப்பையில் 23 விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால் இடையில் அவருக்கு ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு அவர் இன்னும் தனது இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இது கவலை அளி ப்பதாக கேப்டன் ரிக்கி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்