முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை கிரிக்கெட் - பாகிஸ்தான்-கென்யா இன்று மோதல்

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

ஹம்பன்டோடா, பிப்.23 - இலங்கையில் உள்ள ஹம்பன்டோடாவில் இன்று உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் 6வது லீக் ஆட்டம் நடக்கிறது. இப்போட்டியில் ஏ பிரிவில் உள்ள பாகிஸ்தான்- கென்யா அணிகள் மோதுகின்றன. சென்னையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் கென்யா நியூசிலாந்திடம் மிக மோசமான தோற்றுப்போனது. உலக தர வரிசையில் 6 வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி கென்யாவை வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணி சமீபத்தில் நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. பாகிஸ்தான் பேட்டிங் ஆர்டரில் கேப்டன் அப்ரிடி, மிஸ்பா-உல்-ஹக், யூனிஸ்கான், ஹபீஸ், அகமது போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், உமர்குல், அஜ்மல், அப்துர் ரகுமான் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர். இந்த இரு அணிகளும் உலககோப்பை போட்டிகளில் மோதுவது இதுவே முதல் தடவையாகும். இலங்கையில் உலக கோப்பை போட்டிக்காக புதிதாக உருவாக்கப்பட்ட ஹம்பன்டோடா மைதானத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இலங்கை அணி கனடாவை பந்தாடியது. தற்போது அங்கு 2 வது ஆட்டம் நடக்கிறது. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிற இந்த ஆட்டத்தை ஸ்டார் கிரிகெட் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago