முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக சுகாதாரத்துறை அதிகாரிக்கு தேசிய அளவிலான விருது

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மே.7 - மலேரியா நோய் ஒழிப்பில் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக தமிழக சுகாதாரத்துறை மாவட்ட பூச்சியியல் வல்லுனர் எஸ்.பாலவிநாயகத்திற்கு தேசிய அளவிலான மருத்துவ விருது கிடைத்துள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள மாவட்ட பூச்சியியல் வல்லுனரும் மாவட்ட மலேரியா நோய் ஒழிப்பு அதிகாரியுமான எஸ்.பாலவிநாயகம் மலேரியா நோய் ஒழிப்பில் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக அவரது சிறந்த சேவையை பாராட்டி டெல்லியில் உள்ள குளோபல் சொசைட்டி பார் ஹெல்த் மற்றும் எஜூகேஷனல் குரோத் என்ற நிறுவனம் சிகித்சக் ரத்தன் என்ற தேசிய அளவிலான மருத்துவ விருதை வழங்கி கெளரவித்துள்ளது. 

டெல்லியில் நடந்த இந்த விருது வழங்கும் விழாவில் தமிழக முன்னாள் கவர்னர் பீஷ்ம நாராயண் சிங், முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவ தேசிய விருதை எஸ். பாலவிநாயகத்தை பாராட்டி அவரது பணி மேலும் சிறக்கும்படி வாழ்த்தி வழங்கினார்கள். தேசிய விருது பெற்ற மாவட்ட மலேரியா அதிகாரி எஸ்.பாலவிநாயகத்திற்கு பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலக டிரைவர் என்.கார்த்திகேயன், லேப் டெக்னீஷியன் சிவா மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago