முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கச்சிமடத்தில் 5000 மீனவர்கள் உண்ணாவிரதம்

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

ராமேஸ்வரம் மே 7, தமிழக மீனவர்கள் 4 பேர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தங்கச்சிமடத்தில் 5000 மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.ராமேஸ்வரத்திலிருந்து ஏப்ரல் 2ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் விக்டஸ், அந்தோணிராஜ், ஜான்பால், மாரிமுத்து ஆகிய 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சித்ரவதை செய்து படுகொலை செய்தனர். ஏப்ரல் 2ம் தேதி நள்ளிரவில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா இலங்கையை வென்றது. இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் படுகொலை செய்து கடலில் தூக்கி வீசியதாக அதிமுக, மதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த மீனவர்களின் படுகொலையை கண்டுகொள்ளாத மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், படுகொலை செய்யப்பட்ட 4 மீனவர்கள் குறித்து மத்திய அரசு 

வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரியும், வரும் காலங்களில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்தியா- இலங்கை மீனவர்கள் சுமூகமாக மீன் பிடிக்க மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கோரி ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதில் இந்தியா- இலங்கை நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பு தமிழக பிரதிநிதி யு.அருளானந்தம் தலைமை வகித்தார். மீனவ சங்கத் தலைவர்கள் அந்தோணி, பென்னடிக், சேசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்திற்கு பாஜக நிர்வாகி முரளிதரன், மதிமுக மாநில இளைஞரணி துணைச் 

செயலாளர் கராத்தே பழனிச்சாமி, ஒன்றியச் செயலாளர் பேட்ரிக், பிபிஎம் தாலுகா செயலாளர் கருணாகரன், நிர்வாகி செந்தில் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இப்போராட்டத்தில் மீனவ பெண்கள், மீனவர்கள் உள்ளிட்ட 5000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago