முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.தி.மு.க. 18-ம் ஆண்டு தொடக்க விழா

சனிக்கிழமை, 7 மே 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மே.7 - ம.தி.மு.க. 18-ம் ஆண்டுத் தொடக்க விழாவை முன்னிட்டு நேற்று (06.05.2011) சென்னை தலைமை நிலையம் தாயகத்தில் காலை 10.30 மணிக்குக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ  தாயகத்தில் உள்ள பெரியார் சிலை, அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் கழகக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கழகப் பொருளாளர் டாக்டர் இரா. மாசிலாமணி, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ், அமைப்புச் செயலாளர் சீமா பஷீர், தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் தமிழ்மறவன், சட்டத்துறைச்

செயலாளர் ஜி. தேவதாஸ், மாவட்டச் செயலாளர்கள் சு. ஜீவன், வேளச்சேரி பி. மணிமாறன், பாலவாக்கம் சோமு, டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கோ.நன்மாறன், விவசாய அணிச் செயலாளர் சூலூர் சி. பொன்னுசாமி, மகளிர் அணிச் செயலாளர்  குமரி விஜயகுமார், சட்டதிட்டத் திருத்தக்குழுச் செயலாளர் வழக்கறிஞர் இரா. அருணாசலம், எழும்nullர் பகுதிச் செயலாளர் தென்றல் நிசார், nullவை மு.பாபு, வழக்கறிஞர்கள் இரா. அந்திரிதா, இராம. சிவசங்கர், ஆர். பிரியகுமார், நாமக்கல் பழனிச்சாமி, கவிஞர் மணிவேந்தன், கே.வி. மலுக்காமலி, குரோம்பேட்டை நாசர் மற்றும் மாவட்ட, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் உள்ளிட்ட அனைத்து அணி நிர்வாகிகள், கழகத் தோழர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்