முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 11 -ம் தேதி தேர்தல் பார்வையாளர்கள் தொகுதியில் இருக்க வேண்டும் தேர்தல் ஆணையம் உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,மே.- 8 - தேர்தல் பார்வையாளர்கள் வரும் 11-ம் தேதி அவர்களுக்கான தொகுதியில் இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வரும் 13- தேதி நடைபெறுகிறது. தேர்தலை கண்காணிக்க இரண்டு தொகுதிக்கு ஒரு  பொது பார்வையாளர், நான்கு தொகுதிக்கு ஒரு கணக்கு சரிபார்க்கும் பார்வையாளர் மற்றும் ஐ.ஜி.அந்தஸ்தில் ஒரு பார்வையாளர், என தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் பார்வையாளர்கள் கடந்த மார்ச் 19 -ம் தேதி முதல் ஏப் .14-ம்தேதி வரை தொகுதியில் இருந்து தேர்தலை கண்காணித்து வந்தனர். வாக்குப்பதிவு முடிந்து ஒரு மாதம் கழித்து, வாக்குஎண்ணிக்கை நடைபெறுவதால், வாக்குப்பதிவு முடிந்த மறுநாள், தேர்தல் பார்வையாளர்கள் தங்களது மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 5 நாட்கள் உள்ளன.  ஒவ்வொரு சுற்றுவாக்கு எண்ணிக்கையிலும், தேர்தல் பார்வையாளர்கள் ஒப்புதல் பெற்றே வெளியிடவேண்டும் என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைய கண்காணிக்கஅனைத்து பார்வையாளர்களும் வரும் 11-ம் தேதி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிக்கு செல்லவேண்டும். அன்று மதியம் 1 மணிக்குள் தொகுதியின் தேர்தல் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago