முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை அருகே கள்ளந்திரியில் மீன்பிடி திருவிழா

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,மே.- 8 - மதுரை அருகே கள்ளந்திரியில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கண்மாயில் இறங்கி மீன்களை அளிச்சிச்சென்றனர். மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள கள்ளந்திரியில், கீழகள்ளந்திரி, ஆமுத்துபட்டி, தொப்புளான்பட்டி, அம்மச்சியாபுரம் ஆகிய 5 கிராமத்திற்கும் சொந்தமான ஐந்து கோயில் பெரியராகிணி கண்மாய் உள்ளது. சுமார் 42 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த கண்மாயில் சுற்று வட்டார கிராம மக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய நேர்த்திக்கடனாக மீன் குஞ்சுகளை விடுவது வழக்கம், ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவிற்கு பின்பு இந்த கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா நிறைவடைந்ததையடுத்து மீன் பிடிப்பதற்காக நேற்று காலை ராகிணி கண்மாய்கரையில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வலை, ஊத்தாகூடை, கச்சா மற்றும் பல மீன்பிடி உபகரணங்களுடன் திரண்டு வந்து காத்திருந்தனர்.  42 ஏக்கர் பரப்பளவு உள்ள கண்மாயில் தண்ணீர் முழுவதும் மறைந்து மனித தலைகளாக காட்சியளித்தன. இதனால் கண்மாயில் இருந்த மீன்கள் திக்கு முக்காடி வலைகளில் சிக்கின. கட்லா, கெண்டை, கண்ணாடி கொண்டை, புல்லு கெண்டை, ரோகு, கொளுத்தி மற்றும் ஆயிரை மீன்கல் போன்றவை அதிகளவில் பிடிபட்டன.  அனைவரும் ஏராளமான மீன்களுடன் உற்சாகமாக வீடு திரும்பினர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 50 கிராம மக்கள் இந்த மீன்பிடி திருவிழாவில் கலந்து கொள்வர். இந்த அனைத்து கிராமங்களிலும் நேற்று மீன் கறி யாவருக்கும் இலவசமாக கிடைக்கும் என்றார்.  கண்மாயில் மீன்பிடிக்கும்போது மீன்முல் குத்தியும், பாம்பு கடித்தும் 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. அமைதியாகவும் உற்சாகமாகவும் நடந்த இந்த திருவிழாவிற்கு ஒத்தக்கடை போலீசார் பாதுகாப்பு வழங்கினர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்