முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அபிராமி மாலில் ரசிகர்களை கவரும் ரோபோக்கள்

புதன்கிழமை, 11 மே 2011      சினிமா
Image Unavailable

சென்னை, மே.11 - அபிராமி மாலில் ரசிகர்களை கவரும் ரோபோக்கள் வைக்கப்பட்டுள்ளன. புரசைவாக்கம் அபிராமி மாலில் ரோபோ பால அபிராமி என்ற பெயரில் புதிய எந்திர திரையரங்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த தியேட்டர் விண்கலம் போன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. படம் பார்க்க வருவோரை வாசலில் ரோபோக்கள் வரவேற்கின்றன. தியேட்டருக்குள் நட்சத்திரங்கள், கிரகங்கள், விண்கலங்கள் மின்னுவது போன்று வசதி செய்யப்பட்டு உள்ளது. படுத்துக்கொண்டே பார்க்கும் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாடியில் சொகுசான படுக்கைகளாக மாறும் சோபாக்கள் வைத்துள்ளனர். படம் பார்க்கும்போது மசால் தோசை, போண்டா வடை, பிரியாணி உணவு வகைகள் பரிமாற வசதி செய்யப்பட்டு உள்ளது. வீட்டுக்கு கார் அனுப்பி அழைத்து வந்து வீட்டிற்கே கொண்டு வரும் வசதியும் செய்யப்பட்டுள்ளன. 3டி படம் காண்பிக்கும் எந்திரங்களும் பொறுத்தப்பட்டு உள்ளன. இந்த தியேட்டர், குத்து விளக்கேற்றி துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. திறப்பு விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ராம நாராயணன், பெப்சி தலைவர் வி.சி. குகநாதன், கே.ஆர்.ஜி., டைரக்டர் கஸ்தூரிராஜா, விடுதலை மற்றும் அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன், சிவலிங்கம், மீனாட்சி, பெரியகருப்பன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் அபிராமி ராமநாதன் தனது சொந்த ஊரான லாங்குறிச்சி கிராம நலப்பணிகளுக்காக ரூ.30 லட்சம் நன்கொடை வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்