முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசியாவை பழி தீர்த்தது இந்தியா

புதன்கிழமை, 11 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

இபோ(மலேசியா),மே.11 - அஸ்லன் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் லீக் ஆட்டத்தில் இந்தியா 5 - 2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.  இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டு போட்டியின் அரையிறுதியில் மலேசியாவிடம் தோற்றதற்கு பழி தீர்த்துக் கொண்டது இந்தியா. 

இந்திய தரப்பில் மன்தீப் இரண்டு கோல்களை அடித்தார். ரோஹன் மின்ஸ், ருபிந்தர் பல்சிங், சுனில் ஆகியோர் தலா ஓரு கோல்களை அடித்தனர். மற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியா 5 -1 என்ற கணக்கில் பாகிஸ்தானையும் பிரிட்டன் 3 - 1 என்ற கணக்கில் நியுசிலாந்தையும் வீழ்த்தின. ரவுண்டு ராபின் சுற்றில் பிரிட்டன் 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 2 வெற்றி. ஒரு டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று 2 வது இடத்தில் உள்ளது. இந்தியா 2 வெற்றி ஒரு டிராவுடன் 7 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்