முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் - பயஸ்-பூபதி ஜோடி முன்னேற்றம்

புதன்கிழமை, 11 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

ரோம், மே. 11 - இத்தாலியில் நடைபெற்று வரும் ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்று க்கு முன்னேறியது. ஆடவருக்கான ஏ.டி.பி. சுற்றுப் பயணப் போட்டிகளில் ஒன்றான ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி இத்தாலியின் தலைநகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. 

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் களம் இறங்கி உள்ளனர். இந்தப் போட்டி தற்போது காலிறுதியை நோக்கி முன்னேறி வருகிறது. 

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் மொத்த பரிசுத் தொகை 2,750,00 அமெரிக்க டாலர்களாகும். இந்தப் போட்டி டயர் - 2 வகையி லான போட்டியாகும். இந்தப் போட்டியை ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர். 

இதன் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி ஜோடி களம் இறங்க ஆயத்தமாக இருந் தது. ஆனால் எதிரணி வீரர்கள் காயம் காரணமாக வராததால் இந்திய வீரர்கள் பை மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

அடுத்து நடக்க இருக்கும் 2 -வது சுற்றில் இந்திய ஜோடி அமெரிக்கா வைச் சேர்ந்த தகுதி நிலை பெறாத சாம் குவெர்ரி மற்றும் ஜான் இஸ் னர் இணையைச் சந்திக்க இருக்கிறது. 

அமெரிக்காவைச் சேர்ந்த சாம் குவெர்ரி மற்றும் ஜான் இஸ்னர் இணை  முன்னதாக நடந்த முதல் சுற்றில், 6 - 3, 6 - 4 என்ற செட் கணக்கில் ஜே மி முர்ரே (இங்கிலாந்து) மற்றும் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) ஜோடியை வென்றது. 

குரோசியா நாட்டில் நடைபெற்று வரும் ஏ.டி.பி. சேலஞ்சர் ஓபன் டெ ன்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் நம்பி க்கை நட்சத்திரமான சோம்தேவ் வர்மன் முதல் சுற்றில் அதிர்ச்சி தோ ல்வி அடைந்து வெளியேறினார். 

ஏ.டி.பி. டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான ஜாக்ரெப் ஓபன் போட்டி குரோசியா நாட்டில் உள்ள முக்கிய நகர்களில் ஒன்றான ஜாக்ரெப் பில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. 

இதன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர்களில் ஒருவ ரான சோம்தேவும், அன்டோனியோ வெர்க்கும் மோதினர். இதில் வெர்க்  3 - 6, 2 - 6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

இந்திய வீரர் சோம்தேவ் ஏ.டி.பி. பயணப் போட்டிக்கான தரவரிசை யில் 68 - ம் நிலை வீரராவார். வெர்க் 232 -ம் நிலை வீரராவார். இந்த இரண்டு வீரர்களும் இந்தப் போட்டியின் மூலமாக முதல் முறையாக மோதினர். 

இந்திய வீரர் சோம்தேவ் இரட்டையர் பிரிவிலும் ஆட இருக்கிறார். அவர் இந்தப் போட்டியில், சுவிஸ் வீரரான யீவ்ஸ் அல்லெக்குரோவு டன் இணைந்து ஆடுகிறார். ஒற்றையர் பிரிவில் வர்மன் தோல்வி அடைந்ததால் இரட்டையர் போட்டிக்கு குறி வைத்து இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago