முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனே 6 விக்கெட் வித்தியாசத்தில் டெக்கான் சார்ஜர்சை வீழ்த்தியது

புதன்கிழமை, 11 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

ஐதராபாத், மே. 11 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில், புனே வாரியர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெக்கான் சார்ஜர்சை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது. புனே மற்றும் டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. 

இந்தப் போட்டியில் புனே அணி தரப்பில், துவக்க வீரர் பாண்டே அபாரமாக பேட்டிங் செய்து அணிக்கு வலுவான நிலையை அளித்தா ர். ரைடர் மற்றும் கங்குலி இருவரும் அவருக்குப் பக்கபலமாக ஆடினர். 

முன்னதாக பெளலிங்கின் போது, எம்.ஆர். மார்ஷ் நன்கு பந்து வீசி 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். யுவராஜ் சிங், பர்னெல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அவருக்கு ஆதரவாக பந்து வீசினர். 

ஐ.பி.எல். டி - 20 போட்டியில், ஆந்திராவின் தலைநகரான ஐதராபாத் தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கத்தில் 53 -வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் கேப்டன் யுவராஜ் சிங் தலைமையிலான புனே வாரி யர்ஸ் அணியும், கேப்டன் சங்கக்கரா தலைமையிலான் டெக்கான் சா  ர்ஜர்ஸ் அணியும் மோதின. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற டெக்கான் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணி சார்பில், எஸ். தவான் மற்றும் ரவி டேஜா இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

ஆனால் முதலில் களம் இறங்கிய டெக்கான் அணி ரன் எடுக்க திணறி யது. இறுதியில் அன்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 136 ரன்னை எடுத்தது. அந்த அணி வீரர்களில் யாரும் அரை சதத்தை நெருங்கவில்லை. 

ரவி டேஜா 27 பந்தில் 30 ரன்னை எடுத்தார். டுமினி 30 பந்தில் 30 ரன் னை எடுத்தார். எஸ். தவான் 17 பந்தில் 24 ரன்னை எடுத்தார்.  சிப்லி 14 பந்தில் 18 ரன்னை எடுத்தார். தவிர, சங்கக்கரா 12 ரன்னையும், ஸ்டெயின் 11 ரன்னையும் எடுத்தனர். 

புனே அணி தரப்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான எம். ஆர். மார்ஷ் 25 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். யுவராஜ் சிங் 17 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, ரோகித் சர்மா மற்று ம் பர்னெல் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

புனே அணி 137 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை டெக்கான் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 18.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 137 ரன்னை எடுத்தது. 

இதனால் புனே அணி 10 பந்து மீதமிருக்கையில் ஐதராபாத்தில் நடந்த இந்த லீக் ஆட்டத்தில், 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெ ற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 

புனே அணி தரப்பில், துவக்க வீரர் பாண்டே அதிகபட்சமாக 42 பந்தி ல் 49 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, ரைடர் 20 பந்தில் 35 ரன்னையும், செளரவ் கங்குலி 32 பந்தில் 32 ரன்னையும், பெர்குசன் 15 ரன்னையும்  எடுத்தனர். 

டெக்கான் அணி சார்பில், கிறிஸ்டியன் 21 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, ஓஜா மற்றும் மிஸ்ரா இருவரும் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago