முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கில் உலாவரும் 50 கொடூர தீவிரவாதிகள் பட்டியல்

புதன்கிழமை, 11 மே 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,மே.12 - இந்தியாவில் படுகொடூர செயல்களில் ஈடுபட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு தப்பியோடி உலாவரும் தாவூத் இப்ராகீம் உள்பட 50 கொடூர தீவிரவாதிகளின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் பாகிஸ்தானை கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் இருநாடுகளிடையே உறவு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவுடன் நேரடியாக மோத முடியாத பாகிஸ்தான், சீனாவின் ஆலோசனைப்படி தீவிரவாதிகளுக்கு ஆயுத பயிற்சியும் நிதியுதவியும் செய்து அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி நாசவேலையில் ஈடுபட செய்கிறது. பாராளுமன்றத்தை தாக்க முயற்சி செய்தது, மும்பையில் பலமுறை குண்டுவெடித்தது, கோவை,பெங்களூர்,புனே,தலைநகர் டெல்லி ஆகிய இடங்களில் குண்டுவெடிப்பு இதில் நூற்றுகணக்கானோர் பலியானது அனைத்துக்கும் பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்பட்டு வரும் தீவிரவாதிகள்தான். மும்பை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராகீம் உள்பட 50-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. 

மேலும் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்திற்கு அடுத்த கொடூர தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஜ் சயீத், மிகவும் கொடூர தீவிரவாதியான ஜாகி ரகுமான் லஹ்வி ஆகியோரும் இந்த 50 தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மும்பை மற்றும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்களில் ஹபீஜ் சயீத்துக்கு தொடர்பு இருக்கிறது. இதற்கான ஆதாரங்களையும் பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமத் தீவிரவாத இயக்கத்தின் தலைவனாக விளங்கும் மெளலானா மசூத் அசாரும் இடம் பெற்றுள்ளான். கடந்த 2001-ம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தை தாக்க முயற்சி செய்த குற்றவாளிகள் பட்டியலில் இவன் முதல் இடத்தை பெற்றுள்ளான். கடந்த 1999-ம் ஆண்டு இந்திய விமானத்தை கடத்திக்கொண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹார் விமான நிலையத்திற்கு தீவிரவாதிகள் கொண்டு சென்றனர். அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களை விடுவிடுப்பதற்காக அசார் விடுவிக்கப்பட்டான். பின்னர் அவன் மீண்டும் பாராளுமன்றத்தை தாக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இவர்களை சேர்த்து மொத்தம் 50 கொடூர தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கு சென்று சுதந்திரமாக உலாவருகிறார்கள். அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரியுள்ளது. இதற்கெல்லாம் பாகிஸ்தான் செவிசாய்க்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்