முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேவாக் இல்லாதது பெரிய இழப்பு - டெல்லி அணி பயிற்சியாளர்

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, மே. 13 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 தொடரில் சென்னை அணிக்கு எதி ரான ஆட்டத்தில் சேவாக் இடம் பெறாதது பெரிய இழப்பு என்று டெ ல்லி அணியின் பயிற்சியாளரான கிரேக் ஷிப்பர்டு தெரிவித்தார். டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளரான கிரேக் ஷிப்பர்டி டம் சென்னை அணிக்கு எதிரான ஆட்டம் குறித்து கேட்ட போது, அவர் கூறியதாவது - 

கேப்டன் சேவாக் ஆடாதது எங்களது அணிக்கு மிகப்பெரிய இழப்பா கும். இந்தத் தொடரில் அவர் அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் தற்போது முதலிடத்தில் இருக்கிறார். 

சேவாக்கின் அதிரடியான ஆட்டத்தால் தான் டெல்லி அணி ஒவ்வொ ரு போட்டியிலும் வெற்றி பெற்றது. கேப்டன் அணியின் முக்கிய வீரர் என்ற முறையில் அவரை நாங்கள் இழந்து விட்டோம். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவ து மிகவும் சவாலானது. பேட்டிங், பெளலிங், பீல்டிங் ஆகிய 3 துறை களிலும் சிறப்பாக செயல்பட்டால் தான் சென்னை அணியை வீழ்த்த இயலும். 

நாங்கள் கடந்த சில போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறோம். இத னால் சென்னை அணிக்கு நாங்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலைக் கொடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்