முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மழை தொடரும் - வானிலை மையம் தகவல்

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, பிப்.24 - வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இருப்பினும் இதன் தொடர்ச்சியாக ஜனவரி மாதத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்தது. பனிப்பொழிவும் இருந்தது. பிப்ரவரி மாதத்தின் துவக்கத்தில் இருந்தே பனிப்பொழிவும் அதிகமாக இருந்தது. சில இடங்களில் பனிப்பொழிவின் காரணமாக திகாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் பகலில் வெயிலும் வாட்டியது.
கோடைகாலம் துவங்குவதற்கு முன்பாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதை உணர முடிகிறது. பகல் நேரத்தில் நிலவும் வெப்பம் காரணமாக வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டது. இது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இருந்து மேற்கு நோக்கி நகரத்துவங்கியது.
இதன்காரணமாக மன்னார் வளைகுடா முதல் தமிழகத்தின் சில பகுதிகள், தெலுங்கானா, தெற்கு கர்னாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக இரவில் ஆங்காங்கே மழை பெய்தது. அதிகபட்சமாக தளியில் 150 செ.மீ. மழை கொட்டியது. சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சில இடங்களில் இந்த மழை பல மணி நேரம் நீடித்தது.
காற்று சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்ததால், நேற்று முன்தினம் பகல் நேரத்திலும், நள்ளிரவிலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மீண்டும் மழை பெய்தது. இந்த காற்று சுழற்சியால் தமிழகத்தில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்