முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல்.போட்டி - பஞ்சாப் அணி அபார வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

இந்தூர், மே. 15 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் இந்தூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி 6 விக்கெட் வித்தியாச த்தில் கொச்சி டஸ்கர்ஸ் அணியை வீழ்த்தி இந்தத் தொடரில் முன்னி லை பெற்று வருகிறது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி தரப்பில், திணேஷ் கார்த்திக் அதிர டியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். மா ர்ஷ் மற்றும் ஹஸ்சே ஆகியோர் அவருக்குப் பக்கபலமாக ஆடினர். 

முன்னதாக பெளலிங்கின் போது, பிபுல் சர்மா நன்கு பந்து வீசி 2 முக் கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாவ்லா, ஹாரிஸ் மற்றும் ஸ்ரீவ த்சவா ஆகியோர் அவருக்கு ஆதரவாக பந்து வீசினர். 

ஐ.பி.எல். டி - 20 போட்டியில் மத்திய பிரதேசத்தின் தலைநகரான இந் தூரில் உள்ள ஹொர்கார் கிரிக்கெட் மைதானத்தில் 57 -வது லீக் ஆட்டம் நடந்தது. இதில், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியும், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியும் மோதின. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. கொச்சி அணி தரப்பில், பிரண்டன் மெக்குல்லம் மற் றும் கேப்டன் ஜெயவர்த்தனே இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

முதலில் களமிறங்கிய கொச்சி அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து, 178 ரன்னை எடுத்தது. அந்த அணி சா ர்பில், ஒரு வீரர் அரை சதமும், ஒரு வீரர் கால் சதமும் அடித்தனர். 

கேப்டன் ஜெயவர்த்தனே பொறுப்புடன் ஆடி, 52 பந்தில் 76 ரன்னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் ஹஸ்சே வீசிய த்ரோவில் ரன் அவுட்டாகி வெளியேறினார். 

அடுத்தபடியாக துவக்க வீரர் மெக்குல்லம் 27 பந்தில் 32 ரன்னை எடுத் தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, ஓ. ஷா 12 பந்தில் 23 ரன்னையும், ஜடேஜா 18 பந்தில் 17 ரன்னையும் எடுத்தனர். 

பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில், பிபுல் சர்மா 32 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, ஹாரிஸ், சாவ்லா மற்றும் ஸ்ரீவத்சவா ஆகி யோருக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது. 

பஞ்சாப் அணி 179 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை கொச்சி அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்னை எடுத்தது. 

இதனால் பஞ்சாப் அணி 7 பந்து மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 

பஞ்சாப் அணி தரப்பில், திணேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவர் 33 பந்தில் 69 ரன்னை எடுத் தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் அடக்கம். தவிர, மார்ஷ் 30 பந்தில் 42 ரன்னையும், ஜே. ஹஸ்சே 15 பந்தில் 21 ரன்னையும், வல்தாட்டி 17 ரன்னையும், மந்தீப் சிங் 15 ரன்னையும் எடுத்தனர். 

கொச்சி அணி சார்பில், ஆர்.பி. சிங் 25 ரன்னைக் கொடுத்து 4 விக்கெ ட் எடுத்தார். ஸ்ரீசாந்த், ஹாட்கே உள்பட மற்ற வீரர்களுக்கு விக்கெட் கிடைக்கவில்லை. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago