முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திணேஷ் கார்த்திக்கு பஞ்சாப் கேப்டன் கில்கிறிஸ்ட் பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

இந்தூர், மே. 15 - ஐ.பி.எல். டி - 20 தொடரில் , கொச்சி அணிக்கு எதிராக இந்தூரில் நடந்த லீக்கில் திணேஷ் கார்த்திக்கின் ஆட்டம் அபாரமாக இருந்தது என் று பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் கேப்டனான ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டு தெரிவித்து இருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு - 

இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் இந்தூரில் நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கொச்சி அணி 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன் குவித்தது. கேப்டன் ஜெயவர்த்தனே 52 பந்தில் 76 ரன்னும்,(8 பவுண்டரி, 2 சிக்சர்),மெக்குல்லம் 32 ரன்னும் எடுத்தனர். 

பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழ ப்புக்கு 178 ரன் எடுத்தது. சென்னையை சேர்ந்த திணேஷ் கார்த்திக் அதி ரடியாக ஆடி 33 பந்தில் 69 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரி, 5 சிக்சர் அடக்கம். 

போட்டியின் இறுதியில் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட் டார். தவிர, மற்றொரு முன்னணி பேட்ஸ்மேனான ஷான் மார்ஷ் 30 பந்தில் 48 ரன் எடுத்தார். ஆர். பி. சிங் 4 விக்கெட் கைப்பற்றினார். 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பெற்ற 5 -வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றி மூலம் அந்த அணி தொடர்ந்து வாய்ப்பில் இருந்து வருகிறது. அந்த அணி 10 புள்ளிகளுடன் 6 -வது இடத்தில் உள்ளது. 

கொச்சி அணி 6 -வது தோல்வியைத் தழுவியுள்ளது. 12 ஆட்டத்தில் ஆடி, 10 புள்ளிகளுடன் அந்த அணி 7 -வது இடத்தில் உள்ளது. இந்த வெற்றி குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட் நிருபர்களிடம் தெரிவித்ததாவது - 

வீரர்களின் கூட்டு முயற்சியால், இந்த வெற்றியைப் பெற்றோம். தொ டக்கத்தில் ஜெயவர்த்தனே , மெக்குல்லத்தின் அதிரடியான ஆட்டத் தைப் பார்த்த போது, கொச்சி அணி 200 ரன்களைத் தொடும் என்று எதிர்பார்த்தோம். 

ஆனால் கடைசி நேரத்தில் எங்களது பெளலர்கள் சிறப்பாக பந்து வீசி  ரன் குவிப்பைக் கொஞ்சம் கட்டுப்படுத்தினார்கள். எங்கள் அணியின் ஷான் மார்ஷ் இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடி வரு கிறார். 

ஆனால் இந்தப் போட்டியில் திணேஷ் கார்த்திக்கின் ஆட்டம் தான் மிகவும் அபாரமாக இருந்தது. கடந்த ஆட்டத்தில், மும்பையை வென்றோம். தற்போது, கொச்சியை வென்றதால் மகிழ்ச்சியுடன் உள்ளோம். இன்னும் சில ஆட்டங்கள் உள்ளன. அதிலும் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார். 

தோல்வி குறித்து கொச்சி அணி கேப்டன் ஜெயவர்த்தனே கூறும் போது, எங்கள் அணிக்கு நல்ல வெற்றி வாய்ப்பு இருந்தது. வீரர்களின் நம்பிக்கை இன்மையால் தோற்றோம். இந்தத் தோல்வி மிகுந்த ஏமா ற்றம் அளிக்கிறது. வெற்றி பெற்று இருந்தால் முன்னேறி இருப்போம் என்றார். 

பஞ்சாப் அணி 12 - வது ஆட்டத்தில் டெல்லியை இன்று சந்திக்கிறது. இன்று நடக்க இருக்கும் மற்றொரு போட்டியில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோத இருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்