முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை கிரிக்கெட் - இங்கிலாந்து நெதர்லாந்தை வீழ்த்தியது

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

நாக்பூர், பிப். 24 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாக்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி கடும் போராட்டத்திற்குப் பின் நெதர் லாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தரப்பில், கேப்டன் ஸ்ட்ராஸ் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான டிராட் இருவரும் அபாரமாக பேட்டிங் செய்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். முன்னதாக இதில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி சிறப்பாக ஆடி 292 ரன்னைக் குவித்தது குறிப்பிடத்தக்கது. அந்த அணி சார்பில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான டென் டஸ்சாட்டே சதம் அடித்தது இறுதியில் வீணாகிவிட்டது. 

மராட்டிய மாநிலத்தில் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க அர ங்கத்தில் உலகக் கோப்பை குரூப் பி பிரிவு லீக் ஆட்டம் நடந்தது. பக லிரவு ஆட்டமான இதில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்தின. 

முன்னதாக இதில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்ப ட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 292 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் சதமும், 4 வீரர்கள் கால் சதமும் அடித்தனர். 

நெதர்லாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான டென் டஸ் சாட்டே சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். அவர் 110 பந்தி ல் 119 ரன்னை எடுத்தார். இதில் 9 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் பிராட் வீசிய பந்தில் பொபாராவிடம் கேட்ச் கொடு த்து வெளியேறினார். 

கூப்பர் 73 பந்தில் 47 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி அடக்கம். தவிர, துவக்க வீரர் பேரஸ்சி 25 பந்தில் 29 ரன்னையும், டி குரூத் 31 பந் தில் 28 ரன்னையும், கேப்டன் போரென் 24 பந்தில் 35 ரன்னையும் எடு த்தனர். 

இங்கிலாந்து அணி சார்பில் வேகப் பந்து வீச்சாளர் பிராட் 65 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். சுழற் பந்து வீச்சாளர் ஸ்வான் 35 ரன் னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பிரஸ்னன் மற்றும் காலி ங்வுட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி 293 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை நெதர்லாந்து அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 48.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்னை எடுத்தது. 

இதனால் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தப் போ  ட்டியில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 

இங்கிலாந்து அணி தரப்பில், கேப்டன் ஸ்ட்ராஸ் அதிகபட்சமாக 83 பந்தில் 88 ரன்னை எடுத்தார். இதில் 9 பவுண்டரி அடக்கம். தவிர, 

டிராட் 65 பந்தில் 62 ரன்னையும், பீட்டர்சன் 61 பந்தில் 39 ரன்னையும், இயான் பெல் 40 பந்தில் 33 ரன்னையும், பொபாரா 20 பந்தில் 30 ரன் னையும் எடுத்தனர். 

நெதர்லாந்து அணி சார்பில், டென் டஸ்சாட்டே 47 ரன்னைக் கொடுத் து 2 விக்கெட் எடுத்தார். தவிர, முடாசர் புகாரி மற்றும் சீலார் ஆகி யோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாய கனாக டென் டஸ்சாட்டே தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்