முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவிற்கு வெளி மாநில தலைவர்கள் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.17 - 3-வது முறையாக முதல்வர் பதவியேற்ற ஜெயலலிதாவை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வாழ்த்தினர். நேற்று மதியம் சென்னை நூற்றாண்டு விழா மண்டபத்தில் ஜெயலலிதா 3-வது முறையாக முதல்வராக பதவியேற்றார்.

இந்த விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏ.பி.பரதன், டி.ராஜா, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, அஜித்சிங், துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ.ராமசாமி, தினபூமி ஆசிரியர் எஸ்.மணிமாறன், அவரது மகன் எம்.ரமேஷ்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் விழாவில் பங்கேற்றனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பண்ருட்டி ராமசந்திரன், சி.பி.எம்.தலைவர்கள் டி.கே.ரங்கராஜன், ஜி.ராமகிருஷ்ணன்,  ச.ம.க. கட்சி தலைவர் சரத்குமார், பொன்.ராதாகிருஷ்ணன், தா.பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். 

பதிவியேற்பு விழா முடிந்ததும், மேடையை விட்டு இறங்கி வந்த ஜெயலலிதா நரேந்திரமோடியின் வாழ்த்துக்களை ஏற்று கொண்டார். அவருக்கு நரேந்திரமோடி சால்வை போர்த்தி மலர் கொத்து கொடுத்து வாழ்த்தினார். பின்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்த தலைவர்கள் ஏ.பி.பரதன், டி.ராஜா, தா.பாண்டியன் ஆகியோரின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார்.

பின்பு தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து, சால்வை அணிவித்து, அவருடன் சிறிது நேரம் பேசிய ஜெயலலிதா பின்பு அஜித்சிங், சோ, டி.கே.ரங்கராஜன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரின் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டார். 

ஜெயலலிதா பதவியேற்றபிறகு, அரங்கில் நிறைந்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ``அநீதியை வீழ்திய தர்மதேவதை அம்மா வாழ்க'' என கோஷமிட்டனர்.

 

விழா துளிகள்: 

 

காலைமுதலே முக்கிய வி.ஐ.பிக்கள், காவல் துறை உயரதிகாரிகள் அரங்கிற்கு வந்துவிட்டனர்.  போலீஸ் உயரதிகாரிகள் ஜனகூட்டத்தில் சிக்கி உள்ளே வருவதற்கு பெரும்பாடுபட்டனர். மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், ஏ.டி.பி.சேகர் உள்ளிட்ட உயரதிகாரிகள் உள்ளே நுழைவதற்கு தொண்டர்கள் கூட்டத்தில் சிக்கி, தடுமாறியபடி வந்தனர். பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சின்னய்யா தொண்டர்கள் கூட்டத்தில் சிக்கி, உள்ளே வந்தார். 

தொண்டர்கள் நெரிச்சலில் சிக்கிய, சுலோச்சனாசம்பத்தை கட்சி நிர்வாகிகள் பாதுகாப்பாக அழைத்து வந்து, அமரவைத்தனர். 

சரியாக 12.27 மணிக்கு அரங்குள் நுழைந்த ஜெயலலிதா தொண்டர்களை பார்த்து கை அசைத்தார். கவர்னர் வருகைக்காக காத்திருந்தார்.

அதன்பின்பு அரங்கம் நிசப்தமானது. வழியெங்கும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டதால் வாகன நெருக்கடி ஏற்பட்டது. பதவி பிரமாணம் செய்து வைக்க வந்த கவர்னர் பர்னாலா வாகன நெரிசலில் மாட்டிக்கொண்டதால் 12.15 மணிக்கு பதவி ஏற்பு மண்டபத்திற்கு வருவதற்கு பதிலாக 12.35 மணிக்குத்தான் வந்து சேர்ந்தார். பின்னர் அவர் ஜெயலலிதாவிற்கு முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதன் பின்னர் 12.48 ஜெயலலிதா பதவியேற்றார். அதன்பின்பு வரிசை பிரகாரம் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். 

33 அமைச்சர்கள் பதவியேற்று முடிக்க சரியாக 1 மணிநேரம் பிடித்தது. 1.48-க்கு பதவியேற்பு முடிவடைந்தது.

அமைச்சர் கருப்புசாமி பதவியேற்க வரும்போது ஜெயலலிதாவை  வணங்கிவிட்டு, வேகமாக ஓட்டமும், நடையுமாக பதவியேற்க சென்றார். இதனால் அரங்கில் சிரிப்பொலி ஏற்பட்டது. மிகவும் பதட்டத்துடன் வேகமாக பதவியேற்றக்கொண்ட கருப்புசாமி, அதே வேகத்தில் கவர்னரை வணங்கிவிட்டு,  ஜெயலலிதாவையும் வேகமாக வணங்கிவிட்டு ஓட்டமும், நடையுமாக சென்றார். இதை ஜெயலலிதா ரசித்து சிரித்தார். 

போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதவியேற்றவுடன், பதட்டத்தில் கவர்னரை வணங்காமல் நேராக ஜெயலலிதா நோக்கி, வந்து வணங்கினார். இதை கூர்மையாக கவனித்த ஜெயலலிதா, செந்தில்பாலாஜியிடம் கவர்னருக்கு நன்றி சொல்லும்படி கூறியதை அடுத்து, வேகமாக திரும்பி சென்ற அமைச்சர் செந்தில்பாலாஜி கவர்னருக்கு நன்றி தெரிவித்து அமர்ந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago