முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சேவாக் விளையாடுவாரா?

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

பெங்களூர், பிப். 24 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதி ராக பெங்களூரில் நடைபெற இருக்கும் லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் துவக்க வீரரான சேவாக் பங்கேற்பாரா? என்பது கேள்விக் குறி யாகியுள்ளது.
இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் தனது முதல் லீக் ஆட்ட த்தில் வங்கதேச அணியைச் சந்தித்தது. இந்தப் போட்டியின் போது, அதிரடி வீரரான சேவாக்கிற்கு வலது காலில் காயம் ஏற்பட்டது.
சேவாக் தற்போது தனது காயத்திற்காக சிகிட்சை எடுத்து வருகிறார். அவரது காயம் விரைவில் குணமடைந்து விடும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் இன்னும் அவரது காயம் குணமாகவில்லை.
இது இந்திய அணி நிர்வாகத்திற்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக பெங்களூரில் நடைபெற இரு க்கும் 2 -வது லீக் போட்டியில் முன்னணி வீரரான சேவாக் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.
இந்திய அணி வீரர்கள் வரும் 27 -ம் தேதி பெங்களூரில் இங்கிலாந்துக் கு எதிரான ஆட்டத்தில் விளையாடுகிறார்கள். இதற்கான பயிற்சி நே ற்று முன் தினம் துவங்கியது. வீரர்கள் 3 மணி நேரம் பேட்டிங் பயிற்சி செய்தனர். முனாப் படேலும் இதில் பங்கேற்றார்.
கும்ப்ளே இந்திய வீரர்களை சந்தித்து சில நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தார். குறிப்பாக பந்து வீச்சாளர்களிடம் அவர் நீண்ட நேரம் உரையாடினார். சேவாக், ஸ்ரீசாந்த், மற்றும் அஸ்வின் ஆகியோர் பயி ற்சி எடுக்க வரவில்லை.
டெண்டுல்கர், நெக்ரா, தேசிய பயிற்சி அகாடமிக்கு சென்று விட்டனர். இதற்கிடையே முதல் ஆட்டத்தில் காயமடைந்த சேவாக் முழுவது ம் இன்னும் குணமாகவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே அவர் இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்குவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அணி நிர்வாகம் அதை மறுத்திருக்கிறது. வலது காலில் அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.
இது பயப்படும்படி இல்லை. ஞாயிற்றுக் கிழமைக்குள் அவர் விளை யாடும் திறன் பெற்று விடுவார் என்றும் இந்திய அணி நிர்வாகிகள் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை சந்தித்தது. மிர்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்