முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தா அரசில் இணைவதா? வேண்டாமா? சோனியா ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,மே.17 - மேற்கு வங்கத்தில் அடுத்து அமையவிருக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான புதிய அரசில் இணைவதா? வேண்டாமா? என்பது குறித்து தமது கட்சியின் மூத்த சகாக்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். மேற்கு வங்க மாநில கட்சி விவகாரங்களை கவனிக்கும் ஷகீல் அகமது மற்றும் தனது அரசியல் செயலாளர் அகமது பட்டேல் ஆகியோருடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது. 

34 ஆண்டு கால கம்யூனிஸ்டு ஆட்சிக்கு மம்தா பானர்ஜி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நாளை 18 ம் தேதி அவர் பதவியேற்கிறார். முன்னதாக அவர் சட்டமன்ற கட்சித் தலைவராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். தனிப் பெரும்பான்மை பலம் பெற்றாலும் கூட மந்திரி சபையில் வந்து இணையுமாறு அவர் காங்கிரசுக்கும் மற்றும் சில கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். 

இதையடுத்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், ஷகீல் அகமதுவும் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து நேற்று சோனியா காந்தியும் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். மம்தாவின் அழைப்பை ஏற்று புதிய அரசில் இணைவதா? வேண்டாமா என்பது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். ஆனால் எது எப்படியிருந்தாலும் கொல்கத்தாவில் நடக்கும் பதவியேற்பு விழாவில் சோனியா கலந்து கொள்வது உறுதியாகி விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்