முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலுக்கு பிறகும் மோதல்கள்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா,மே.17 - மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலுக்கு பிறகு நடந்த மோதல்களில் 4 பேர் பலியாகி விட்டார்கள். இதனால் மக்கள் கவலையில் மூழ்கியுள்ளனர்.மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் நடந்தாலே கடுமையான மோதல்கள் இருக்கும். திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும், கம்யூனிஸ்டு தொண்டர்களும் கடுமையாக மோதிக் கொள்வார்கள். இதனால்தான் அங்கு 6 கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த 6 கட்ட தேர்தல்களும் பெரும்பாலும் அமைதியாகவே நடந்து முடிந்துள்ளது. மம்தா பானர்ஜியும் முதல்வராக போகிறார். ஆனால் தேர்தலுக்கு பிறகு அங்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளது. இது மாநில மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. 

இது போன்ற வன்முறைகளை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். மே 14 ம் தேதிக்கு பிறகு இம்மாநிலத்தில் தெற்கு 24 பர்கானா மாவட்டத்திலும், மேற்கு மிட்னபூர், ஹவுரா, பங்குரா பகுதிகளிலும் மோதல்கள் வெடித்ததில் 4 பேர் கொல்லப்பட்டு விட்டார்கள். வாக்கு எண்ணிக்கை முடிந்த மறுநாள் இப்படி கலவரம் வெடித்திருக்கிறது. மேற்கு மிட்னபூரில் பல்வேறு பகுதிகளில் உள்ள பல வீடுகளில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

ஒரு இ.கம்யூனிஸ்டு ஆதரவாளர் தேர்தலுக்கு பிந்தைய மோதலில் கொல்லப்பட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள் இந்த வன்முறையில் ஈடுபட்டதாக கம்யூனிஸ்டு கட்சி கூறுகிறது. ஆனால் இதை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது. பங்க்கர் என்ற இடத்தில் மம்தாவின் ஆதரவாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பங்க்குரா என்ற இடத்தில் இ.கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மண்டல குழு உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மற்றொரு இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இப்படியாக இரு தரப்பிலும் 4 பேர் பலியாகி விட்டார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்