முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டி - கொச்சி டஸ்கர்ஸ் அபார வெற்றி

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

இந்தூர், மே. 17 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 கிரிக்கெட் போட்டியில், இந்தூரில் நடைபெற்ற ஆட்டத்தில், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இந்தத் தொ டரில் முன்னிலை பெற்று உள்ளது. 

இந்தப் போட்டியில் கொச்சி அணி தரப்பில், ஹாட்கே தனது ஆல்ரவு ண்டிங் திறமையை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். அவருக்கு பக்கபலமாக படேல், மெக்குல்லம், ஸ்ரீசாந்த் மற்றும் பர மேஸ்வரன் ஆகியோர் ஆடினர். 

முன்னதாக பந்து வீச்சின் போது, ஹாட்கே 4 முக்கிய விக்கெட்டுக ளைக் கைப்பற்றி ராஜஸ்தான் அணியின் ரன் குவிப்பை கட்டுப் படுத் தினார். பின்பு பேட்டிங்கின் போது, கால் சதம் அடித்து அணியின் வெ ற்றியை உறுதி செய்தார். 

ஐ.பி.எல். டி - 20 கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகரான இந்தூரில் உள்ள ஹொல்கார் கிரிக்கெட் மைதானத்தில் 61 -வது லீக் போட்டி பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் ராஜஸ்தா ன் ராயல்ஸ் அணியும், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியும் மோதின. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற கொச்சி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் மற்றும் பாஜல் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

ஆனால் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேரள அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந் து 97 ரன்னில் சுருண்டது. 

ராஜஸ்தான் அணி தரப்பில், ஒரு வீரர் கூட அரை சதத்தை தாண்டவில் லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான மெனேரியா அதிகபட்சமாக, 28 பந்தில் 31 ரன்னை எடுத்தார். இதில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக் கம். இறுதியில் அவர் , ஹாட்கே வீசிய பந்தில் ஷாவிடம் கேட்ச் கொ டுத்து வெளியேறினார். 

அடுத்தபடியாக, வாட்சன் 13 பந்தில் 20 ரன்னை எடுத்தார். இதில் 3 சிக் சர் அடக்கம். தவிர, துவக்க வீரர் பாஜல் 15 பந்தில் 16 ரன்னை எடுத் தார். இதில் 3 பவுண்டரி அடக்கம். கேப்டன் வார்னே 2 ரன்னிலும், கீப்பர் ஷா 5 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 

கொச்சி அணி சார்பில், ஹாட்கே 13 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். ஸ்ரீசாந்த் 16 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவி ர, ஆர்.பி.சிங் 1 விக்கெட் எடுத்தார். 

கொச்சி டஸ்கர்ஸ் 97 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளி ய  இலக்கை ராஜஸ்தான் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 7.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்னை எடுத்தது. இதனால் கொச்சி அணி இந்தூரில் நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில் 76 பந்து மீதமிருக்கையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 வெற்றிப் புள்ளிகள் கிடைத் தது. 

கொச்சி அணி தரப்பில், ஹாட்கே அதிகபட்சமாக, 17 பந்தில் 33 ரன் னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். மெக்குல் ல ம் 12 பந்தில் 29 ரன்னையும், படேல் 14 பந்தில் 21 ரன்னையும் எடுத்தனர். கேப்டன் ஜெயவர்த்தனே 6 ரன்னில் ஆட்டம் இழந்தார். 

ராஜஸ்தான் அணி சார்பில், என். டோஷி 15 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். ஜேக்கப் ஓரம் 32 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். டெய்டிற்கு விக்கெட் கிடைக்கவில்லை. இந்தப் போட்டியி ன் ஆட்டநாயகனாக ஹாட்கே தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago