முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் இன்று பலப்பரீட்சை

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி, பிப்.24 - உலக கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை 6 போட்டிகள் முடிந்து முடிந்துல்ளன. இன்று 7வது போட்டி டெல்லி மைதானத்தில் நடக்கிறது. உலக கோப்பை கிரிக்கெட்டில் 7 வது போட்டி டெல்லி மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் பி. பிரிவில் இடம் பெற்றுள்ள பலம் வாய்ந்த அணிகளான தென்னாப்பிரிக்காவும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.இதில் இரு அணிகளுமே சக்தி வாய்ந்த அணிகளாக திகழ்கின்றன. சமீப காலமாக தென்ஆப்பிரிக்கா அணி சிறப்பாக விளையாடி வருகிறது.எனவே அந்த அணி இந்த போட்டியிலும் பிரகாசிக்கலாம். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. திடீரென ஆவேசமாக தாக்கி எந்த அணியையும் திணறடித்து வெற்றியை கைப்பற்றிய வரலாறும் இந்த அணிக்கு உண்டு. தென்ஆப்பிரிக்கா அணியின் அம்லா,சுமித்,காலிஸ், டிவில்லியர்ஸ் என பலம் வாய்ந்த பேட்டிங் வரிசை உள்ளது. ஸ்பெயின், மார்கள் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெயில், சந்தர்பால், சர்வான், டேரன்சமி போன்ற முன்னணி பேட்ஸ் மேன்கள் உள்ளனர். இவர்கள் உலக கோப்பை போட்டியில் புதிய எழுச்சி பெற்று ஆடினால் அது தென்ஆப்பிரிக்காவுக்கு ஆபத்தாக முடியும். இரு அணிகளுமே பலம் வாய்ந்திருப்பதால் இந்த போட்டியில் கிடைக்கும் வெற்றி இரு அணிகளுக்குமே முக்கியமானதாக இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago