முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசின் 7 மக்கள் நலத்திட்டங்கள் மார்க்சிஸ்ட் கட்சி மாநில தலைவர் வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 19 - தமிழக அரசின் 7 மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து நடைமுறைபடுத்தவுள்ள அ.தி.மு.க. அரசிற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வரவேற்றுள்ளார். இது குறித்த விபரம் வருமாறு:​- அ.தி.மு.க. புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற அன்றே தமிழக முதல்வர் ஏழு நலத்திட்டங்களுக்கு அனுமதியளித்து  அதற்கான கோப்பில் கையெழுத்திட்டுள்ளார்.
ரேஷனில் 20 கிலோ அரிசி இலவசம், படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ. 25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் இலவசம், பட்டம் அல்லது பட்டயம் பெற்ற பெண் திருமணத்துக்கு ரூ.50 ஆயிரத்துடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் இலவசம், முதியோர் உதவி பெறும் பெண்களின் ஓய்வூதியம் ரூ. 500​இல் இருந்து ரூ. 1,000/​ ஆக உயர்வு, மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால உதவி பணம் ரூ.1,000​ல் இருந்து ரூ.2,000/​ஆக உயர்வு, அரசு பெண் ஊழியரின் மகப்பேறு கால விடுப்பு சலுகை 6 மாதமாக உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை என  7 நலத்திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. இது நல்ல துவக்கம். தமிழக முதல்வர் அறிவித்த திட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.
இதேபோன்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அம்சங்களை அமலாக்குவதோடு குவிந்துகிடக்கும் இதர மக்கள் பிரச்சனையை தீர்ப்பதற்கும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மாநில அரசை கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்