முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறிய ஆபரேஷன் மூலம் ரஜினிக்கு நுரையீரல் நீர்கோர்ப்பு அகற்றம்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 18 - உடல்நலக்குறைவு காரணமாக போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சி.டி. ஸ்கேன் மற்றும் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இரைப்பையில் அலர்ஜி மற்றும் காய்ச்சல், சளிக்கு மருந்துகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ரஜினிக்கு நுரையீரலில் நீர்கோர்ப்பு இருந்ததால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து நெஞ்சில் சிறிய ஆபரேஷன் செய்து அதன் மூலம் நுரையீரல் நீர் கோர்ப்பு அகற்றப்பட்டது. ஆபரேசனுக்கு பிறகு ரஜினி குணமடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ரஜினிக்கு தனிவார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பார்வையாளர்களை சந்திப்பதை தவிர்த்து ஓய்வு எடுக்கும் படி அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் மருத்துவ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொதுமருத்துவர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்து வருவதாகவும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருப்பதாகவும் கூறப்பட்டது. ரஜினியுடன் அவருடைய மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் தங்கியுள்ளனர்.
குஜராத் முதல்வர் நரேந்தர மோடி, ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் ரஜினியை சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். சிகிச்சைக்காக ரஜினியை வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்லும் திட்டம் இல்லை என நடிகர் தனுஷ் கூறினார். ரஜினி உடல்நிலை குறித்து கடந்த இரண்டு நாட்களாக மோசமான வதந்திகள் பரவின. இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தனுஷ் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago