முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வை மக்கள் தண்டித்து விட்டனர் நித்யானந்தர் பரபரப்பு பேச்சு

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      தமிழகம்
Image Unavailable

திருவண்ணாமலை, மே.18-
மத உணர்வுகளை புண் படுத்தியவர்களை மக்கள் தண்டித்து விட்டனர் என்று திருவண்ணாமலையில் நித்யானந்தர் பேசினார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பவுர்ணமி தினமான நேற்று முன்தினம் (16-ந்தேதி) தியான சத்சங்கம் நடைபெற்றது. இதில் பரமஹம்ச நித்யானந்தர் கலந்துகொண்டு பேசியதாவது-
மதத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள், மத உணர்வை புண் படுத்தியவர்களை மக்கள் தண்டித்து விட்டனர். ஓய்வு கொடுத்து விட்டனர். மக்கள் புத்திசாலி என்பதை காட்டிவிட்டனர். தியானம், ஞானக்கருத்து வாழ்க்கை மூலம் நாம் ஜெயித்து விட்டோம். புதிய அரசு துக்கத்தில் இருந்து நம்மை மீட்கும். மத சுதந்திரத்தை காத்து நம் வாழ்க்கையை நிம்மதியாக வைத்திருக்கும். நல்லாட்சி நடந்திடவும் மக்கள் நலமுடன் வாழவும் வாழ்த்துகிறேன்.
33 வயதான எனக்கு கைது, சிறை புதியது. ஆனால் கைதாகி சிறைக்கு சென்றபோது அமைதியாகத்தான் சென்றேன். அய்யய்யோ கொல்றாங்க என சத்தம் போடவில்லை. நாத்திகம் ஒரு வாழ்க்கை முறையாக இருக்கக் கூடாது. இவர்கள் நாட்டை கெடுத்து விட்டனர். எங்கள் வாழ்க்கை முறை, எங்களது ஆன்மிக உணர்வை மத தாக்குதல் மூலம் அழித்து விட முடியாது. அப்படி செய்தால் எங்கள் பக்தி ஆழமாகத்தான் மாறும். தமிழகத்தில் மத சுதந்திரம் மீட்கப் பட்டு விட்டது. நிம்மதியாக இந்த நாட்டில் வாழலாம். அச்சம் இல்லாமல் சுதந்திர காற்றை சுவாசிக்கலாம். ரவுடிகளுக்கு காவல்துறை துணை போகாது.
பக்தர்களே ஆன்மிக கடமையை தொடர்ந்து செய்யுங்கள். தமிழகத்தில் உள்ள எனது 12 லட்சம் பக்தர்கள் நிம்மதியாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஞானத்தையும் தியானத்தையும் உலகம் முழுவதும் பரப்புங்கள். இனிமேல் அடிக்கடி தமிழகத்துக்கு வருவேன். சத்சங்கங்களை தொடர்ந்து நடத்துவோம். இந்த பீடத்தில் அன்னதான திட்டத்துக்கு ரூ.25 லட்சமும் வைப்பு நிதியாக ரூ.25 லட்சமும் அளித்துள்ளோம்.
திருவண்ணாமலையில் 1 வருடத்துக்குள் ரூ.10 கோடி செலவில் இலவச இருதய நோய் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டப்படும். ஒன்றரை வருடத்துக்குள் இந்த மருத்துவமனை செயல்பட தொடங்கும். இந்த மருத்துவமனையை சில வருடங்களுக்கு முன்பு அமைக்க நடவடிக்கை எடுத்தோம். இந்த மருத்துவமனை அமைய வேண்டுமானால் 10 சதவீத கமிஷன் வேண்டும் என சிலர் கேட்டதால் நிறுத்தி விட்டோம். இதேபோல் நவபாஷாண லிங்கம் அமைப்பதற்கும் சிலர் கமிஷன் கேட்டனர். இதனால் பெங்களூரில் நவபாஷாண லிங்கத்தை அமைத்தோம். தற்போது திருவண்ணாமலையிலும் நவபாஷாண லிங்கம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெறும்.
இவ்வாறு பரமஹம்ச நித்யானந்தர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்