முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினிகாந்த் 6 மாதம் ஓய்வு சினிமாவில் நடிக்கமாட்டார்- சத்யநாராயணன் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, - 18 - நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்கு பின்பு ஓய்வு எடுக்கவேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளதால் 6 மாத கலாத்திற்கு சினிமாவில் நடிக்கமாட்டார் என்று அவரது சகோதரர் சத்திய நாராயணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விபரம் வருமாறு:​  நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் உடல்நலக்குறைவு காரணமாக   மயிலாப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் வீடு திரும்பினார். மீண்டும் வயிற்று கோளாறு காரணமாக  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  ஒருவார சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பினார்.
கடந்த சனிக்கிழமை காலையில் மீண்டும் ரஜினிக்கு  உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தற்போது போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர  சிகிச்சையை டாக்டர்கள் அளித்து வருகின்றனர். இந்நிலையில்  முதல்வர் ஜெயலலிதா பதவிஏற்பு விழாவிற்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி,  தெலுங்குதேச  கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு , எழுத்தாளர் சோ ஆகியோர் சென்று பார்த்து நலம் விசாரித்தனர். பின்னர் மருத்துவமனை சார்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ரஜினி நுரையீரல் நோய் தொற்று பாதிப்பு, நிமோனியை காய்ச்சல், அதிக உடல் சோர்வு காரணமாக எங்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று டாக்டர்கள அறிக்கை தெரிவிக்கின்றது.
அவருக்கு  சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறியதாவது:​
ரஜினியின் நுரையீரலுக்கும், மார்புக்கும் இடையில் நீர் கோர்த்துக்கொண்டு உள்ளது. இது நுரையீரலை அழுத்துவதால் சுவாக்கோளாறு ஏற்பட்டது.  எனவே சிறிய சிகிச்சையின் மூலம் நீர் கோர்வையை அகற்றிவிட்டோம். மேலும் நோய் தொற்றை குணமாக்க மருந்துகள் கொடுத்து வருகின்றோம். அப்பப்போது ஆக்சிஜனும் கொடுக்கப்பட்டு வருகின்றது. அவரது ரத்தத்தில் கிரியாட்டின் அளவு அதிகமாக இருந்ததை தொடர்ந்து  ஹூமோ டயாலிசிஸ் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. மூச்சு திணறல் பிரச்சனை தீர்ந்ததும் சிறுநீரக இயக்கம்  சரியாகிவிடும் என்று எதிர்பாகின்றோம். இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.
பின்னர் ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணன்  அவரது உடல்நலம் பற்றி கூறுகையில்,  ரஜினிகாந்திற்கு முழு ஓய்வு தேவைப்படுகின்றது.  சிகிச்சைக்கு பின்பு அவர் 6 மாதம் காலம் சினிமாவில் நடிக்கமாட்டார். உடல்நலம சரியான பின்பு படபிடிப்பிற்கு  திரும்புவார் என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்