முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2011 தமிழக சட்டசபை தேர்தலில் பணநாயகத்தை தோற்கடித்த ஜனநாயகம்

புதன்கிழமை, 18 மே 2011      தமிழகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம்,மே.- 18 - நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் பணநாயகத்தை மக்களின் ஜனநாயகம் வென்றுள்ளது.  அ.தி.மு.க. கூட்டணி 203 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 146 தொகுதிகளில் மாபெரும் வெற்றியடைந்தது. தமிழகத்தில் நடைபெற்ற 14 வது சட்டசபைக்கான தேர்தலில் அ.தி.மு.க. ஒரு அணியாகவும், ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. ஒரு அணியாகவும் போட்டியிட்டன. இதற்கு முன்பு வரை நேர்மையாகவும், ஜனநாயகமாகவும் நடைபெற்று வந்த தமிழகத்தின் பொது மற்றும் இடைத் தேர்தல்களில் முதல் முறையாக திருமங்கலம் இடைத் தேர்தலில் கோடிக்கணக்கில் பணம் விளையாடியது. அந்த தேர்தல் பணநாயக தேர்தலாகவும் மாறியது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரி, திருமங்கலம் இடைத் தேர்தலுக்கு பொறுப்பேற்று தேர்தல் அலுவலர்களை கைக்குள் போட்டுக் கொண்டும், ஓட்டுக்கு ரூ. ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை வீடு வீடாக விநியோகித்தனர். அப்போது தி.மு.க ஆளும் கட்சியாக இருந்ததால் அராஜகங்களையும் கட்டவிழ்த்து விட்டனர். பணத்தை பெற்றுக் கொண்டு ஓட்டுப் போடாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் தி.மு.க.வினர் மிரட்டினர். அவர்களின் மிரட்டலுக்கு பயந்த சிலர், பணத்தை பெற்றுக் கொண்டோம் என்பதால் தி.மு.க.வுக்கு பயந்து கொண்டே ஓட்டு போட்டனர். திருமங்கலம் தொகுதி தமிழக வரலாற்றில் முதல் முறையாக ஜனநாயகத்தை தோற்கடித்து பணநாயகத்தை வெற்றி பெற செய்தது. அங்கு தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு தி.மு.க.வினர் கோடி கோடியாக பணத்தை செலவு செய்தனர். அங்கு தி.மு.க வெற்றி பெற்ற பின்னர் திருமங்கலம் பார்முலா என்ற புதிய வார்த்தை உருவானது. திருமங்கலத்தை தொடர்ந்து மதுரை மேற்கு, மத்தி, திருச்செந்தூர் உட்பட பல்வேறு இடைத் தேர்தல்களிலும் திருமங்கலம் பார்முலாவையே தி.மு.கவினர் பின்பற்றினர். அங்கும் கோடிக்கணக்கில் செலவு செய்து தி.மு.கவை வெற்றி பெறச் செய்தனர். இனி எந்த தேர்தல் நடந்தாலும் திருமங்கலம் பார்முலாவை பயன்படுத்தி பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்று விடலாம் என தி.மு.க புதுக் கணக்கு போட்டது.
இந்நிலையில் தி.மு.கவின் 5 ஆண்டு கால ஆட்சி நிறைவு பெறும் நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த பொதுத் தேர்தலிலும் திருமங்கலம் பார்முலாவை கடைப்பிடித்து மீண்டும் தி.மு.கவை ஆட்சிக்கு கொண்டு வர தி.மு.க. தலைமையும் நிர்வாகிகளும், தொண்டர்களும் கணக்குப் போட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் தேர்தலை சந்திக்க தயாராகினர். இவர்களின் திருமங்கலம் பார்முலாவை கண்டு எதிர்க்கட்சிகளும் கலக்கத்தில் இருந்தன. அப்படியிருந்தும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் மிகுந்த தைரியத்துடன் கூட்டணி அமைத்து தேர்தல் களமிறங்கினார். அவர்களின் திருமங்கலம் பார்முலாவை முறியடிக்கவும் கூட்டணி கட்சியினருடன் ஜெயலலிதா செயல் திட்டம் வகுத்தார்.
நிலைமை இப்படி இருக்க தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக பிரவீண்குமார் நியமிக்கப்பட்டார். அவரது நியாயமான நடவடிக்கைகளால் தி.மு.க.வினரின் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதனால் தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்வதில் இடையூறு ஏற்பட்டது. பறக்கும் படை, வீடியோ குழுக்கள்  என பல குழுக்கள் அமைத்து தி.மு.க வினர் கடத்திய பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் கமிஷனின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் அதிர்ந்து போன தி.மு.க.வினர் பின்னர் சுதாரித்து தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவி விட்டு பொறுப்பாளர்கள் மூலம் ஓட்டுக்கு ரூ. 200 ஐ இரவில் மின்தடை ஏற்படுத்தி வழங்கினர். தொகுதிக்கு ரூ. 3 கோடி முதல் ரூ. 6 கோடி வரை தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்தனர்.
இதையறிந்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் கூட்டணி கட்சியினர், நாம் தமிழர் இயக்க நிறுவனர் இயக்குனர் சீமான் ஆகியோர் தேர்தல் பிரச்சாரங்களில், தி.மு.கவினர் வியர்வை சிந்தி உழைத்த பணத்தையா உங்களுக்கு தருகின்றனர். உங்களிடம் இருந்து கொள்ளையிட்ட, உங்களது உழைப்பை சுரண்டிய பணத்தை தானே தருகின்றனர். உங்களது பணத்தை உங்களுக்கு தரும் போது அதை நீங்கள் மறுக்காமல் வாங்கி கொள்ளுங்கள். ஓட்டுக்களை மட்டும் அவர்களுக்கு போட்டு விடாதீர்கள். அப்படி காசுக்காக தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு போட்டால் உங்களை நீங்களே பாதுகாத்து கொள்ள முடியாது என பிரச்சார மேடைகளில் பேசினர். இவர்களின் இந்த பிரச்சாரமும், தி.மு.க ஆட்சியில் பட்ட துன்பங்களையும் மக்கள் சிந்திக்க தொடங்கினர். பணத்தை பெற்றுக் கொண்ட தி.மு.கவிற்கு ஓட்டளித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் தங்களின் நிலை என்ன ஆகும் என மக்கள் யோசித்து தமிழக மக்கள் தெளிவாக முடிவெடுத்து தி.மு.கவினர் கொடுக்கும் பணத்தை பெற்றுக் கொண்டு தி.மு.கவுக்கு எதிராகவும் அ.தி.மு.கவுக்கு ஆதரவாகவும் ஓட்டளிக்க ஏக மனதாக முடிவு செய்தனர். தேர்தலின் போது பணம் கிடைக்கப் பெறாதவர்கள் தி.மு.கவினர் வீடுகளுக்கு சென்று எங்கள் வீட்டில் உள்ள ஓட்டுக்களுக்கு இன்னும் பணம் வந்து சேரவில்லையே. எப்போது கொடுப்பீர்கள் என கேட்டு, பணத்தை பெற்றனர். இது தவிர இடைத் தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் ஓட்டுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தார்கள். ஆனால் தற்போது ரூ. 200 மட்டுமே தருகின்றனரே என தி.மு.கவினர் மீது மக்கள் கடும் கோபமடைந்தனர். தற்போது ரூ. 200 கொடுத்து விட்டு ஜெயித்து ஆட்சியில் உட்கார்ந்து கொண்டு கோடி கோடியாக கொள்ளையடிக்க நினைக்கும் தி.மு.கவினர் மீது மக்கள் கடும் கோபம் கொண்டனர். பணத்திற்கு தங்களை தி.மு.க அடிமையாக்கப் போகிறார்கள், மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஏழை, நடுத்தர மக்கள் பிச்சையெடுக்கும் நிலைக்கு ஆளாக்கப்படுவர் என்பதை நன்கு உணர்ந்த தமிழக மக்கள் பணநாயகத்தை முறியடிக்க தீர்க்கமாக முடிவு செய்தனர். அவர்களது கோபங்களை வெளிப்படுத்த தேர்தல் நாளை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏப்ரல் 13 ல் அவர்கள் தங்களது கோபங்களை தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வாக்குகளாக பதிவு செய்தனர். முடிவுகள் தி.மு.க வுக்கு மிக மோசமான தோல்வியை ஏற்படுத்தியது. இதன் மூலம் பணநாயகத்தால் ஜனநாயகத்தை வென்று விடலாம் என்ற தி.மு.கவினரின் எண்ணமும், தப்புக்கணக்கும் தோற்றுப் போயுள்ளது. ஜனநாயகத்தை நம்பிய அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்று 3 வது முறையாக ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக ஆகியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago