முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள முதல் மந்திரியாக உம்மன்சாண்டி பதவியேற்றார்

புதன்கிழமை, 18 மே 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,மே.19 - கேரள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணி நேற்று உம்மன்சாண்டி தலைமையில் பதவியேற்றது. திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த விழாவில் முதல் மந்திரி உம்மன்சாண்டிக்கு கவர்னர் கவாய் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல் கட்டமாக உம்மன்சாண்டியுடன் கூட்டணி கட்சியான கேரள காங்கிரசை சார்ந்த மானி நிதித்துறை மந்திரியாகவும், ஜோசப் நீர்வளத்துறை மந்திரியாகவும் பதவியேற்றார்கள். 

முஸ்லீம் லீக் கட்சி குஞ்சாலி குட்டிக்கு விவசாயத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சோசலிஸ்ட் ஜனதா கட்சியை சேர்ந்த மோகனன் தொழில் மந்திரியானார். கேரள காங்கிரஸ்(ஜே) கட்சியை சேர்ந்த ஜேக்கப்புக்கு உணவுத் துறையும் சிபுபேபி ஜானுக்கு தொழிலாளர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. நடிகர் கணேஷ்குமார் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றார். உம்மன்சாண்டியுடன் இவர்கள் நேற்று பதவியேற்றார்கள். 

இதையடுத்து காங்கிரசை சேர்ந்த திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன், ஆரியாடம் பீர்முகமது, ஜோசப், சிவக்குமார், அடூர் சுரேஷ், பாலகிருஷ்ணன், கங்காதரன், தீரன்பிரதாபன் ஆகியோருக்கு மந்திரி பதவி வழங்கப்பட உள்ளது. முதல் மந்திரி பதவியேற்ற பிறகு உம்மன் சாண்டியும் மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஸ் சென்னிதலாவும் அமைச்சர்கள் பட்டியலுடன் இன்று டெல்லி செல்கிறார்கள். அங்கு சோனியா காந்தியிடம் ஆலோசனை நடத்தி மந்திரி பட்டியலை இறுதி செய்கிறார்கள். இதைத் தொடர்ந்து வருகிற 23 ம் தேதி நடைபெறும் விழாவில் காங்கிரசை சேர்ந்த 9 பேர் மந்திரிகளாக பதவியேற்பார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்