முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவுக்கு இந்திய கம்யூனிஸ்டு தா.பாண்டியன் வாழ்த்து

புதன்கிழமை, 18 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.19 - தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே புதிதாக ஒரு துறையை உருவாக்கி செயலாற்றி வரும் ஜெயலலிதாவுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது என தா.பாண்டியன் கூறியுள்ளார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன், மக்களுக்குத் தேர்தல் அறிக்கையின் மூலம் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அளித்துள்ள பல திட்டங்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

குடும்ப அடையாள அட்டைகள் மூலம் அரிசி பெறுவோர் அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கவும், இளம் பெண்களின் திருமணத்திற்கு உதவும் வகையில் நான்கு கிராம் தங்கமும், பண உதவியும் வழங்கிடவும், மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லத் தடைவிதிக்கப்படும் காலத்திற்கு வழங்கப்படும் தொகையை உயர்த்திக் கொடுத்தமைக்காகவும், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்  ஆகியோருக்கான மாத ஊதியத்தை உயர்த்தியமைக்காகவும், பட்டம் அல்லது பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையை ஐம்பதாயிரமாக உயர்த்தியமைக்கும், பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மின்வெட்டினைத் தளர்த்தவும், முழுமையாக nullநீக்கவும், உடனடி நடவடிக்கைகளைத் தொடர்ந்துள்ள முதலமைச்சர் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படும் என்றும், குறிப்பாகப் பள்ளிக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளதையும் வரவேற்கிறோம்.

இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளை மீட்டுக் கொடுப்பதற்காகத் தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கும் என அறிவித்திருப்பதற்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை எனும் ஒரு புதிய துறையைத் தொடங்கியதையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தா.தாண்டியன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்