முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெரினா கடலில் மூழ்கி சிறுவன்-கைகுழந்தை பலி

புதன்கிழமை, 18 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே .19 - சென்னை மெரினா கடற்கரையில் நின்றிருந்தபோது 3 வயது சிறுவனும் 7 மாத கை குழந்தையும் பலியானதாக குழந்தைகளின் தாயார் போலீசில் புகார் அளித்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த விபரம் வருமாறு:-

சென்னை கெல்லீஸ் மேடவாக்கம் டேங்க் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அரிகுமார். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி லாவண்யா (20). இவர்களது மகன் ஆகாஷ் (3), nullஜாஸ்ரீ என்ற 7 மாத கைக்குழந்தையும் இருந்தது. 

நேற்று முன்தினம் இரவு லாவண்யா தனது 2 குழந்தைகளுடன் மெரீனா கடற்கரைக்கு சென்றார். கடலில் இறங்கியபோது ஆகாசும், nullஜாஸ்ரீயும் அலையில் இழுத்து செல்லப்பட்டனர். அதிர்ச்சி அடைந்த அவர் ஆகாசை மீட்டார். ஆனால் அவன் மூச்சு திணறி பரிதாபமாக இறந்து விட்டான். குழந்தை nullஜாஸ்ரீயை மீட்க முடிய வில்லை. இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார கடலில் மூழ்கிய nullஜாஸ்ரீயை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை லாவண்யா அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையம் வந்தார். அவரிடம் இன்ஸ்பெக்டர் ராம மூர்த்தி விசாரணை நடத்தினார். 

அப்போது அவர் கூறியதாவது:​ மெரீனா கடற்கரை கடற்படை தளம் அருகே நான் ஒரு குழந்தையை இடுப்பிலும், மற்றொரு குழந்தையை கையில் பிடித்தபடியும் கடலில் நின்று கொண்டிருந்தேன். அப்போது வந்த ராட்சத அலை எங்களை கடலுக்குள் இழுத்து சென்று விட்டது. ஆகாசை மட்டும் மீட்க முடிந்தது. nullஜாஸ்ரீயை காணவில்லை. உயிருக்கு பேராடிய அவனை அக்கம் பக்கத்தினர் உதவியோடு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

இவ்வாறு அவர் கூறினார். 

மெரீனாவில் உள்ள கடற்படை தளம் அருகே யாரும் செல்வது கிடையாது. ஆனால் லாவண்யா அங்கு சென்று குழந்தைகளுடன் கடலில் நின்றதாக கூறியது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் பொதுமக்கள் அதிகம் நிற்கும் இடத்திற்கு செல்லாமல் ஏன் தனிமையான இடத்திற்கு சென்றார்? என்பது மர்மமாக உள்ளது. லாவண்யா தொடர்ந்து சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் முண்ணுக்குப்பின் முரணாக போலீசாரிடம் தகவல் தெரிவித்து வருகிறார். 

சம்பவம் நடந்த இடம் கோட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியாகும். இதனால் கோட்டை போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

லாவண்யா தற்கொலை முயற்சியில் கடற்கரைக்கு வந்திருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்