முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாளை மலர்காட்சி துவக்கம்

புதன்கிழமை, 18 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

ஊட்டி, மே.19 - ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாளை மலர்காட்சி துவங்கவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக ஊட்டி ரோஜா பூங்காவில் கடந்த 7,8 தேதிகளில் ரோஜா கண்காட்சியும், தொடர்ந்து 14 மற்றும் 15 தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியும் நடத்தப்பட்டது. கோடை விழாவின் அடுத்த நிகழ்ச்சியாகவும், உலக மக்களின் எதிர்பார்ப்பை நோக்கியுள்ளதுமான ஊட்டி மலர்கண்காட்சி வரும் 20, 21, 22 தேதிகளில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மலர்காட்சியையொட்டி கண்காட்சி அரங்குகளில் வைப்பதற்காக 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் நடவுசெய்யப்பட்டிருந்த இன்கோ மேரிகோல்டு, டெக்டோனியா, டேன்சி, சால்வியா, பிரஞ்ச் மேரிகோல்டு உட்பட 150 க்கும் வகையான மலர்கள் பூத்துக்குலுங்கியிருந்தன. இந்த பூந்தொட்டிகளை கண்காட்சியில் அடுக்கும் பணி நேற்று துவங்கியது. இப்பணியை வைத்த தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஆல்தொரை மற்றும் பூங்கா உதவி இயக்குநர் பிரகாசம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் ஏராளமான பூங்கா பணியாளர்கள் கலந்து கொண்டு அடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.  

இது குறித்து தாவரவியல் பூங்கா தோட்டக்கலை உதவி இயக்குநர் பிரசாகம்  

கூறியதாவது:​

வரும் 20-ந் தேதி முதல் மூன்று நாட்களுக்கு அரசு தாவரவியல் பூங்காவில் 115-வது மலர்கண்காட்சி நடைபெறுகிறது. அதற்காக பூங்கா வளாகத்தில் 15 ஆயிரம் மலர்தொட்டிகளில் நடவு செய்யப்பட்டிருந்த 150-க்கும் மேற்பட்ட வகையிலான மலர்செடிகளை கண்காட்சி அரங்குகளில் அடுக்கும் பணி இன்று(நேற்று) துவங்கியுள்ளது. படிப்படியாக அரங்கு முழுவதும் இத்தொட்டிகள் அடுக்கி வைக்கப்படும். மேலும் பார்வையாளர்களை கவரும் வகையில் பூங்காவில் பல்வேறு வகையான மலர்செடிகளும் நடவு செய்யப்பட்டு தற்போது பூத்துக் குலுங்க ஆரம்பித்துள்ளன. வரும் 20-ந் தேதி தொடங்கும் மலர்காட்சியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களை கவரும் வகையில் உலக பல ஆயிரக்கணக்கான மலர்களைக்கொண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கோப்பையை வென்றதை குறிக்கும் வகையில் சிறப்பு அலங்காரம் செய்யவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூன்று நாட்கள் நடைபெறும் மலர்காட்சியின் துவக்க விழா நாளை நடைபெறும் நிலையில் இவ்விழாவில் தமிழக வேளாண்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுலாத்துறை அமைச்சர் புத்தி சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மலர்காட்சியை துவக்கி வைக்க உள்ளனர். இவ்விழாவில் தோட்டக்கலைத்துறை ஆணையர் சந்திரமோகன், மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் உட்பட அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago