முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினியிடம் சரத்குமார் நலம் விசாரிப்பு

சனிக்கிழமை, 21 மே 2011      சினிமா
Image Unavailable

சென்னை, மே.21 - ரஜினியை சரத்குமார் சந்தித்து நலம் விசாரித்தார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 16-ந் தேதி சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் நேற்று ரஜினிகாந்த்தை மருத்துவமனையில் சந்தித்தார். லதா ரஜினிகாந்த்தையும் சந்தித்து ரஜினிகாந்த் பூரண குணமடைய பிரார்த்திப்பதாக கூறினார். பின்னர் வெளியே வந்த நடிகர் சரத்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ரஜினிகாந்த் நலமாக உள்ளார். அவர் பழைய உடல் நிலைக்கு வருவதற்கு நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம். விரைவில் அவர் பூரண குணமடைவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்