முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழி-ஆ.ராசா சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி,மே.22 - ரூ.1.76 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவும் தி.மு.க. எம்.பி.யும் கருணாநிதியின் மகளுமான கனிமொழியும் நேற்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, மற்றும் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் ஆகியோர் கோர்ட்டில் இருந்தனர். ஒரு கட்டத்தில் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் கோர்ட்டில் மயங்கி கீழே விழுந்தார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் அவரது உதவியாளர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் இவர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் சி.பி.ஐ. தனது 2-வது இரண்டாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் அலைக்கற்றையை விதிமுறைகளுக்கு மாறாக ஒதுக்கீடு செய்ததில் பலன் அடைந்ததாக கூறப்படும் சாகித் பல்வாவுக்கு சொந்தமான டி.பி. ரியாலிட்டி நிறுவனம், குசேகான் நிறுவனம் மற்றும் சினியுக் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியவைகள் மூலமாக கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி லஞ்சப்பணம் கைமாறியது தெரியவந்தது. இதன் அடிப்படையில் கலைஞர் தொலைக்காட்சியின் 60 சதவீத பங்குதாரரான தயாளு அம்மாள்,20 சதவீத பங்குதாரர்களான கனிமொழி, டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. பிறகு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான இவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்கள். கடந்த மே 6-ம் தேதி கனிமொழி சார்பாக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர் கனிமொழிக்கு எந்த தொடர்பும் இல்லை. ராசாவே முறைகேடுக்கு முழுக்காரணம் என்று வாதித்தார். அதேசமயம் சரத்குமார் சார்பாக மூத்த வழக்கறிஞர் அல்டாப் அகமது ஆஜராகி,சரத்குமாருக்கு ஜாமீன் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் சி.பி.ஐ. வழக்கறிஞர் லலித் எக்காரணம் கொண்டும் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஷைனி ஜாமீன் வழங்குவது குறித்த தனது உத்தரவை முதலில் 14-ம் தேதிக்கும் பிறகு 20-க்கும் தேதிக்கும் ஒத்திவைத்தார். அதன்படி நேற்றுமுன்தினம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊழலை குற்றச்சாட்டை கவனத்தில் கொள்ளும்போது குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் ஜாமீன் கொடுத்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இருவருக்கும் ஜாமீன் அளிக்க முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இருவரையும் காவலுக்கு அனுப்பவும் அவர் உத்தரவிட்டதையடுத்து இருவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். டெல்லி திகார் சிறையில் 150 சதுர அடி அறையில் கனிமொழி அடைக்கப்பட்டுள்ளார். அந்த அறையில் ஏ.சி.போன்ற வசதிகள் இருக்காது. டி.வி., மின்விசிறி போன்ற வசதிகளும் அளிக்கப்படும். செய்திதாள்களும் அவருக்கு அளிக்கப்படும் என தெரிகிறது. நீதிபதி உத்தரவிட்டதையடுத்து பெண் காவலர்கள் கனிமொழியை கையைப்பிடித்து திகார் சிறைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறை எண் 6-ல் அடைக்கப்பட்டார். கனிமொழியுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரத்குமார் சிறை எண்-4 ல் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஏற்கனவே கைதான ராசா உள்ளிட்ட நபர்களும் இதே திகார் சிறையில்தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று ஆ.ராசாவும் கனிமொழியும் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்கள். அப்போது அவருடன் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாளும் டி.ஆர்.பாலு எம்.பி.யும் கோர்ட்டில் இருந்தனர். மகளின் நிலையை பார்த்த ராஜாத்தி அம்மாள் பாட்டியாலா கோர்ட்டில் மயங்கி கீழே விழுந்தார். அதன்பிறகு மீண்டும் கனிமொழியும் ராசாவும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்