முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்க நிதி அமைச்சருக்கு உடல் நலம் பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, மே.22 - மேற்கு வங்காளத்தில் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமீத் மித்ராவுக்கு உடல் நிலை  பாதிக்கப்பட்டுள்ளது.நேற்று முன் தினம் கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.அவருடன் மேலும் 37 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.இவர்களில் பிரபல பொருளாதார நிபுணரும் பிக்கி அமைப்பின் முன்னாள்  பொதுச்செயலாளருமான அமீத் மித்ராவும் ஒருவர். இவருக்கு முதல்வர் மம்தா பானர்ஜி நிதி இலாகாவை ஒதுக்கி இருந்தார்.

இவருக்கு நேற்று கடுமையான அடிவயிற்று வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் கொல்கத்தாவில் உள்ள  பெல்லி வூ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவரது உடல் நிலை இப்போது முன்னேற்றத்துடன் இருப்பதாக அந்த மருத்துவமனையின்  நிர்வாகி  பி.கே.  டாண்டன் தெரிவித்தார்

இவர் தற்போது 48 மணி நேரத்திற்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.இவர் பூரண நலம் பெறுவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும் என்றும் அவர் கூறினார். நிதி அமைச்சர் மித்ராவுக்கு வயது 69 ஆகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago