முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் மகாதலித் இன மக்களை பி.பி.எல்.லில் சேர்க்க கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      இந்தியா
Image Unavailable

பாட்னா,மே.22 - மகாதலித் மக்களை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் தானாகவே சேர்க்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை பீகார் மாநில துணைமுதல்வர் எஸ்.கே. மோடி கேட்டுக்கொண்டுள்ளார். நாடு முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் எத்தனை பேர் உள்ளனர் என்பதை கண்டறிய கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அப்போது பீகார் மாநிலத்தில் மகாதலித் இன மக்களை வறுமை கோர்ட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று துணைமுதல்வர் எஸ்.கே. மோடி நேற்று பாட்னாவில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாதலித் இன மக்களை மத்திய அரசு கண்டுகொள்வதே இல்லை. நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழே எத்தனை குடும்பங்கள் இருக்கின்றன என்பதை அறிய தேர்தல் கமிஷன் அமைத்து செயல்படுவதுபோல் பி.பி.எல்.கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும். பீகார் மாநிலத்தில் 57 சதவீத குடும்பங்கள் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளது என்பதை தெண்டுல்கர் கமிஷன் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் மாநிலத்தில் 75 சதவீத குடும்பங்கள் வறுமை கோட்டிற்கு கீழ இருக்கும் என்று என்.சி.சக்சேனா கமிட்டி மதிப்பீடு செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் மோடி மேலும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்