முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கூரில் 400 ஏக்கர் நிலம் திரும்ப அளிக்கப்படும்

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா,மே.22 - மேற்கு வங்கம் சிங்கூரில் டாடா கார் ஆலைக்காக கையகப்படுத்தப்பட்ட 400 ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் திரும்ப அளிக்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பதவியேற்புக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 

விருப்பம் இல்லாத விவசாயிகளிடம் இருந்து சிங்கூரில் கையகப்படுத்தப்பட்ட 400 ஏக்கர் நிலம் திரும்ப அளிக்கப்படும். இது தான் மேற்கு வங்க அமைச்சரவையின் முதல் முடிவு. டாடா ஆலை விரும்பினால் மீதமுள்ள 600 ஏக்கரில் ஆலை அமைக்கலாம். மாவோயிஸ்டு தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட ஐங்கல் மகால் பகுதிக்கு சிறப்பு பொருளாதார திட்டத்தை அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்படும். 

டெல்லியில் பிரதமர் அலுவலகம் இருப்பது போன்று கொல்கத்தாவில் விரைவில் முதல்வர் அலுவலகம் அமைக்கப்படும். இதன் மூலம் வளர்ச்சி திட்டங்களை விரைந்து மேற்கொள்ள முடியும். சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பதுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படும். மாநிலத்தில் சட்டம் ஒழுங்குக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். அரசியல் விவகாரங்களால் கைது செய்யப்பட்டோர் குறித்து ஆய்வு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். எனது பாதுகாப்புக்காக குண்டு துளைக்காத காரை பயன்படுத்தும் திட்டம் ஏதுமில்லை. எனது கட்சிக்காரர் அளித்த காரையே இப்போது பயன்படுத்தி வருகிறேன். அந்த காரில்தான் இனியும் பயணம் செய்வேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்