முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தா தலைமையிலான அமைச்சர்களுக்கு இலாக்காகள் ஒதுக்கீடு

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, மே.22 - மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாக்காகள் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி  தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.  தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு போதிய பலம் இருந்தாலும் கூட கூட்டணி கட்சியான காங்கிரசையும் மம்தா தனது  அரசாங்கத்தில் சேர்த்துக்கொண்டார்.

நேற்று முன்தினம் மேற்கு வங்காள மாநிலத்தின் முதல் பெண் முதல்வராகவும் 11 வது முதல்வராகவும் மம்தா பதவி ஏற்றுக்கொண்டார்.

 மேலும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 35 பேரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

புதிய அமைச்சர்களுக்கு என்னென்ன இலாக்காகள்  என்ற விவரத்தை மம்தா நேற்று வெளியிட்டார்.

உள்துறை , நிலம் மற்றும் நில சீர்திருத்தங்கள், செய்தி ,கலாச்சார விவகாரங்கள், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், விவசாயம், மலை சம்பந்தமான விவகாரங்கள், சிறுபான்மையினர் விவகாரம், மதரசா கல்வி, பெட்ரோலியம், நிர்வாக சீர்திருத்தங்கள், மின்சாரம் ஆகிய 9 இலாக்காகளை மம்தாவே வைத்துக்கொண்டார்.

பிரபல பொருளாதார நிபுணரும் இந்திய தொழில் வர்த்தக அமைப்பான பிக்கியின் முன்னாள்  பொதுச்செயலாளருமான அமீத் மித்ராவுக்கு நிதி மற்றும் எக்சைஸ் இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது. மம்தாவின் நெருங்கிய உதவியாளரான பார்த்தா சட்டர்ஜிக்கு வர்த்தகம் மற்றும் தொழில் ,  பொது நிறுவனங்கள், தொழிற்சாலை மறு கட்டமைப்பு, சட்ட மன்ற விவகாரம், தகவல் தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்