முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் மரியம்பிச்சை மறைவு சரத்குமார் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே. 24 - சுற்றுச்சூழல் அமைச்சர் மரியம்பிச்சை மறைவிற்கு ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. மற்றும் தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக்தாவூத் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-
சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ.:-
நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதோடு, சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பொறுப்பேற்ற மரியம்பிச்சை கார் விபத்தில் அகால மரணமடைந்திருப்பது பேரதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
பதவியும், பொறுப்பும் கைகூடி வந்த வேளையில் சட்டமன்ற உறுப்பினர் பதவியேற்பு விழாவிற்கு  வரும்வழியில் அவருக்கு நேர்ந்த அசம்பாவிதம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு திரைப்படத் துறையில் எனக்கு நீண்ட நாள் நண்பராகவும் இருந்தவர் மரியம்பிச்சை. அந்த இனிய நண்பரோடு சட்டமன்றத்தில் இணைந்து பணியாற்றும் சந்தர்ப்பம் இல்லாமல் போனது எனக்கு தனிப்பட்ட முறையில் மனவேதனை அளித்திருக்கிறது. ஈடுசெய்ய முடியாத இழப்பாக அவரைப் பிரிந்துவாடும் அன்னாரது குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த வருத்ததையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது இழப்பால் துயருற்றிருக்கும் தமிழக முதல்வர்  ஜெயலலிதாவிற்கும், அவரது கட்சியினருக்கும் என் சார்பிலும், சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மறைந்தாலும் நம்நெஞ்சில் நீங்காது நிலைத்திருக்கும் மரியம்பிச்சையின் ஆன்மா சாந்தி அடையவும் மறுமை வாழ்வு இனிதாக அமையும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறன். தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக்தாவூத்:-
சுற்றுச்சூழல் அமைச்சர் மரியம்பிச்சை கார் விபத்தில் மரணமடைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு மனவேதனையடைந்தேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய, இறைவனின் நிழலில் இளைப்பாற, எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் உற்றார், உறவினர்களுக்கும் தமிழ் மாநில முஸ்லீம் லீக் தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறு அவர்கள் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago