முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

27-ம் தேதி பேரவை தலைவர் - துணை தலைவர் தேர்தல் சபாநாயகர் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 24 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப். 24 - வருகின்ற 26-ந்தேதி தமிழக சட்டசபைக்கு சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வுக்கான வேட்பாளர்கள் தங்களது வேட்புமனு தாக்கல் செய்யலாம். அடுத்த நாள் 27-ந்தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்று இன்றைய சபாநாயகர் செ.கு.தமிழரசன் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
வரலாற்று புகழும், பாரம்பரிய பெருமையும் உடைய தமிழகத்தின் பதினான்காவது சட்டமன்ற பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற, மேதினியே வியக்கும் வண்ணம் ஒரு மெளன புரட்சியை நடத்தி, மிகப்பெரிய மகத்தான வெற்றியை பெற்று, ஏழுகோடி தமிழ் மக்களின் உள்ளமெலாம் நிறைந்து, அவர்தம் இல்லமெங்கும் மகிழ்ச்சி சுடரை ஏற்றி, பெரும்புகழ் ஈட்டியிருக்கும், ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்கு, அடித்தளத்து மக்களின் ஆனந்தசுவாச காற்று, நலிந்த மக்களின்  நம்பிக்கை நட்சத்திரமான முதல்வரையும், அமைச்சர் பெருமக்களையும், உறுப்பினர்களாகிய உங்கள் ஒருவ்வொரரையும் நான் அன்போடு வரவேற்கிறேன். மக்கள் சேவையின் மகத்தான பணிக்கு முழுமையாக அர்ப்பணித்து தமிழக மக்களின் அங்கீகாரம் பெற்றுள்ள உங்கள் ஒவ்வொருவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன். ஜனநாயக முறையில் அமைதியாக தேர்தல் நடைபெற ஒத்துழைத்த பொதுமக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பதினான்காவது சட்டமன்ற பேரவையின் உறுப்பினர்களாக பதவியேற்க  இருக்கும் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய எண்ணத்தால், உழைப்பால் தமிழக மக்களின் வாழ்விற்கும், வளத்திற்கும் மேலும், பெருமை சேர்க்க வேண்டுமென்று என் நெஞ்சம்  நிறைந்த நல்வாழ்த்துக்களை உங்கள் ஒவ்வொருவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறப்புமிக்க இப்பேரவைக்கு ஒரு தலைவரை இப்பேரவை தேர்ந்தெடுக்கின்றவரையில் ஆற்ற வேண்டிய முன் அலுவல்களை நிறைவேற்றுவதற்கென என்னை இப்பேரவையின் தற்காலிக தலைவராக ஆளுநர் நியமித்திருக்கிறார்கள். அதற்காக ஆளுநருக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எனது உளங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலில், பேரவைக்கு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாம் இப்பேரவையின் அலுவலர்களை ஏற்று நடத்துவதற்கு முன், இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி, அதற்குரிய உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை இன்று நிறைவேற்றுவதற்காகவும், பேரவை தலைவர் தேர்தலை நடத்துவதற்காகவும் ஆளுநர் என்னை பணித்துள்ளார்.
முதலில் முதல்வர் மற்றும் அமைச்சர்களையும், பிறகு செயலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் சட்டமன்ற கட்சி தலைவர்களையும், அடுத்து முன்னாள் முதலமைச்சரையும், முன்னாள் துணை முதலமைச்சரையும்,  முன்னாள் அமைச்சர்களையும், அரசு தலைமை கொறடாவையும், பிறகு தமிழ் அகர வரிசைப்படி உறுப்பினர் பெருமக்களையும் பதவி பிரமாணம் அல்லது உறுதிமொழி எடுத்துக் கொள்ள சட்டமன்ற பேரவை செயலாளர் அழைப்பார். அவ்வாறு அழைக்கப்பெற்றவுடன் ஒவ்வொருவராக வந்து சட்டமன்ற பேரவை உறுப்பினராக தேர்ந்எதடுக்கப்பட்டதற்கான தேர்தல் சான்றிதழை சட்டமன்ற பேரரை செயலாளவிடம் கொடுக்க வேண்டும்.
உறுதிமொழி எடுத்துக் கொள்வதற்கான வாசகங்கள்  அடங்கிய படிவம் உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும்: அதில்,
உளமாற உறுதி கூறுகிறேன் - என்றும், கடவுளறிய உறுதி கூறுகிறேன் - என்றும், இரண்டு வாசகங்கள் இருக்கும். உறுப்பினர்கள் அவரவர் விருப்பப்படி ஏதாவது ஒரு முறையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம். மேலும், இப்படிவும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இருக்கும். உறுப்பினர்கள் தம் விருப்பப்படி ஏதாவது ஒரு மொழியில் (அதாவது தமிழ் அல்லது ஆங்கிலத்தில்) உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம்.  உறுதிமொழி எடுத்துக் கொள்ளும்போது படிவத்திலுல்ள வாசகங்களை மட்டுமே படிக்க வேண்டும். அதை கூட்டவோ, குறைக்கவோ கூடாது.
உறுதிமொழி எடுத்துக் கொண்டபின்  உறுப்பினர்கள் அந்த படிவத்தில் கையெழுத்திட்டு செயலாளரிடம்  கொடுக்க வேண்டும். அதற்கு பிறகு செயலாளரின் மேஜைக்கு இடப்புறத்தில் வைக்கப்பட்டுள்ள உறுப்பினர் பதிவேட்டில் கையொப்பம் இடுதல் வேண்டும்.
இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி எடுக்கப்படவேண்டிய உறுதிமொழியை நான் ஏற்கெனவே 22.5.11 அன்று ஆளுநர் முன்னிலையில் எடுத்துக் கொண்டுவிட்டதால், இப்போது நான் முதலில் உறுப்பினர் பதிவேட்டில் விதிகளில் குறித்துள்ளபடி பேரவை செயலாளர் முன்னிலையில் கையெழுத்திடுகிறேன்.
உறுதிமொழி எடுக்கும் கடமை மகிவும் புதினமானது. எனவே, உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி முழுவதும் நிறைவேறும் வரை எல்லா உறுப்பினர்களும் பேரவையில் அமைதியாக அமர்ந்து இருக்குமாடு கேட்டுக் கொள்கிறேன்.
தற்போது அமைச்சர்களை தவிர மற்ற உறுப்பினர்களுக்கு பேரவையில் அமருவதற்கு தனி இடம் ஒதுக்கப்படவில்லை. 27.5.11 அன்று தேர்த்தெடுக்கப்பட இருக்கின்ற பேரவைத் தலைவர் பேரவை விதிகளின்படி உறுப்பினர்களுக்கு தனி இடம் ஒதுக்கித் தருவார்கள்.
27.5.11 அன்று பேரவை தலைவர், பேரவைத் துணைத்தலைவர் தேர்தல்கள் இப்பேரவையில் நடைபெறும்.
பேரவை விதிகளின் கீழ் பேரவை தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் கலந்து கொள்ளும் வேட்பாளர்களும், அவர்களை முன்மொழியும், வழிமொழியும் உறுப்பினர்களும் அச்சமயத்தில் உறுதிமொழியை எடுத்துக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும் என்றும், அதற்கான வேட்புத்தாள்களை செயலாளரிடத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஏற்கெனவே உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளபடி 26.5.11 அன்று நண்பகல் 12.00 மணிக்குள் வேட்புத்தாள்களை செயலாளரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்றும் உறுப்பினர்களின்  கனிவான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
 இப்போது உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்வதற்கு செயலாளர், உறுப்பினர்களது பெயர்களை குறிப்பிட்டு அழைப்பார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்