முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்வெட்டு விரைவில் சீர்படுத்தப்படும்-முதல்வர் ஜெயலலிதா பேட்டி

செவ்வாய்க்கிழமை, 24 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 25 - மின்வெட்டு விரைவில் சீர்படுத்தப்படும் என்றும் விலைவாசிகளை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று  முதல்வர் ஜெயலலிதா கூறினார். மேலும், இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள் வருமாறு:- கடந்த வாரம் நான் உங்களை (நிருபர்களை) சந்தித்தபோது வாரம் ஒரு முறை உங்களை சந்திப்பதாக கூறினேன். நேற்று  முன்தினம் சந்திப்பதாக இருந்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக அமைச்சர் மரியம் பிச்சை இறந்ததால் திருச்சி செல்ல வேண்டியதாகி விட்டது.
கேள்வி:​ கடந்த முறை நீnullங்கள் ஆட்சியில் இருந்தபோது மழை நீnullர் சேமிப்பு, குடிnullநீர் வழங்குவது போன்ற பல்வேறு திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்தீர்கள். இந்த முறை சூரிய ஒளி மின்சாரம் போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து மின்சார தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா? மின் தட்டுப்பாடு எப்போது nullநீங்கும்?
பதில்:​ தமிழக மக்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்ல விரும்புகிறேன். மின் தட்டுப்பாட்டை  நீnullக்க எங்கள் அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் நல்ல மாற்ற வரும். விரிவாக அதுபற்றி தற்போது சொல்ல முடியவில்லை.பின்னர் தெரியவரும்.
கேள்வி:​ பெட்ரோல் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதற்கான விற்பனை வரியை தமிழக அரசு ரத்து செய்யுமா?
பதில்:​ பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது கண்டனத்துக்குரியது. விற்பனை வரியை குறைப்பது குறித்து விரைவில் பரிசீலனை செய்து முடிவு எடுப்போம்.
கேள்வி:​ அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த இருக்கிறதா? பதில்:​ அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கேள்வி:​ கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
பதில்:​ ஒட்டு மொத்த விலைவாசியையும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கேள்வி:​ ஏற்கனவே பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. அடுத்து டீசல், எரிவாயு விலையும் உயர்த்தப்படும் என்று பிரணாப்முகர்ஜி கூறியிருக்கிறாரே?
பதில்:​ விலைவாசி உயர்வுக்கு காரணமே பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான். அடுத்து டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தினால் எல்லா தரப்பு மக்களும் மிகுந்த சிரமப்படுவார்கள். எனவே மேலும் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்த்தப்படுவதாக இருந்தால் கண்டனத்துக்குரியது. அதை கைவிட வேண்டும்.
கேள்வி:​ 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை திருப்தி அளிக்கிறதா?
பதில்:​ தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளால் நீnullதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
கேள்வி:​ தமிழ்நாட்டின் நிதி நிலை அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா?
பதில்:​ நாங்கள் பதவி ஏற்று சில நாட்கள்தான் ஆகி இருக்கிறது. அரசு நிதி நிலை குறித்து பல்வேறு துறைகள் மூலம் ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வு முடிந்த பிறகுதான் நிதி நிலைமை பற்றி தெரிய வரும். தேவைப்பட்டால் வெள்ளை அறிக்கை வைக்கப்படும்.
கேள்வி:​ தமிழகத்தில் மேல்​ சபை மீண்டும் வருமா?
பதில்:​ ஒவ்வொரு முறையும் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது மேல்​ சபை கொண்டு வர முயற்சி எடுக்கிறது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது மேல்​ சபை வேண்டாம் என்று ரத்து செய்கிறது.  எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்த போதுதான் மேல்​ சபை தேவை இல்லை என்று கலைத்தார். அது தேவை இல்லை என்பதுதான் அ.தி.மு.க.வின் கொள்கை. அதில் மாற்றம் இல்லை. மேல்​சபை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்வோம்.
இவ்வாறு முதல்​ அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago