முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியா அதிபர் கடாபிக்கு ஐ.நா. தலைவர் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011      உலகம்
Image Unavailable

 

ஐ.நா.பிப்.25 - லிபியா நாட்டு நிலவரம் மிகவும் ஆபத்தாக உள்ளது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீ மூன் தெரிவித்துள்ளார். எகிப்தில் அதிபர் முபாரக்கிற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வெற்றி பெற்று விட்டனர். இதையடுத்து லிபியா, ஏமன் போன்ற அரபு நாடுகளிலும் மக்கள் புரட்சி வெடித்திருக்கிறது. ஆனால் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் ஏவப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பலர் பலியாகி விட்டார்கள். மக்கள் மீது நடத்தப்படும் வன்முறையை தடுக்குமாறு அதிபர் கடாபிக்கு வேண்டுகோள் விடுத்தும் அவர் அதை நிராகரித்து விட்டார். 

இதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீமூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். லிபியாவில் நிலைமை ஆபத்தாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக அவர் லிபியா அதிபர் கடாபியுடன் 40 நிமிடம் தொலைபேசியில் பேசினார். லிபியாவில் அமைதியை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால் கடாபி அதற்கு செவிசாய்க்கவில்லை என்று வருத்தத்தோடு கூறினார் பான்கீமூன். கடாபியின் போக்கு ஏற்கத்தக்கதல்ல என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் வருத்தத்தோடு குறிப்பிட்டார். இனியாவது அவர் வன்முறையை நிறுத்த வேண்டும் என்று பான்கீ மூன் கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்