முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். ஐ. உதவியது : ஹெட்லி வாக்குமூலம்

புதன்கிழமை, 25 மே 2011      உலகம்
Image Unavailable

சிகாகோ, மே. 25  மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் நடத்தியது என்றும் இதற்கு பாகிஸ்தான் உளவு ஸ்தாபனமான ஐ.எஸ்.ஐ. பெருமளவு உதவி செய்தது என்றும் தீவிரவாதி ஹெட்லி கொடுத்த வாக்குமூலம் சிகாகோ கோர்ட்டில் தாக்க செய்யப்பட்டது.
அமெரிக்காவில் சிகாகோ சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவன் தாடியுடன் திரிந்தான். அவனை சிகாகோ போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவன் பெயர் டேவிட் கால்மன் ஹெட்லி என்றும் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவன் என்றும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் ஒரு முஸ்லீம் என்றும் அமெரிக்காவுக்கு வந்த பெயரை கிறிஸ்து பெயரான ஹெட்லி என்று மாற்றிக்கொண்டதும் தெரிந்தது. அவனுக்கும் பாகிஸ்தானில் இருந்துகொண்டு இந்தியாவில் நாசவேலையில் ஈடுபட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பும் இருப்பது தெரியவந்தது. மேலும் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் ஹெட்லி மூளையாக செயல்பட்டிருக்கிறான். அதோடு மட்டுமல்லாது இந்தியாவில் கொச்சி, புதுடெல்லி உள்பட பல முக்கிய நகரங்களில் குண்டுவெடிப்பு நடத்துவது தொடர்பாக வந்து சென்றுள்ளான். அவன் கொடுத்த வாக்குமூலம் அனைத்தையும் சிகாகோ கோர்ட்டில் அரசு வழக்கறிஞர் சாரா ஸ்ட்ரெய்கர் தாக்கல் செய்தார். அதில் மும்பையில் தாக்குதல் நடத்திய லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்திற்கு டேவிட் உதவி செய்திருக்கிறான் என்று கூறப்பட்டுள்ளது. 50 வயதாகும் ஹெட்லி, அப்ரூவராக மாறிவிட்டான்.  மும்பையில் எந்தெந்த இடத்தில் தாக்குதல் நடத்துவது என்பதை அடையாளம் பார்ப்பதற்காக ஹெட்லியும் அவனுடைய நண்பன் ராணாவும் பலமுறை மும்பைக்கு வந்து சென்றுள்ளனர். கனடா நாட்டு குடியுரிமை பெற்றவன் ராணா. இவனும் பாகிஸ்தான் நாட்டை பூர்வீகமாக கொண்டவன் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தையும் தாக்க டேவிட் திட்டமிட்டுள்ளான். மேலும் அங்குள்ள சிவசேனா தலைமை அலுவலகத்திற்கும் சென்று வந்துள்ளான். அங்குள்ள மக்கள் தொடர்பு அதிகாரி ராஜாராம் ரெஜி என்பவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள ஹெட்லி முயற்சி செய்துள்ளான். மும்பையில் தாக்குதல் நடத்தியது முழுமுழுக்க லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம்தான் என்றும் அந்த இயக்கத்திற்கு ஐ.எஸ்.ஐ. உதவி செய்ததது என்றும் டேவிட் கூறியுள்ளான். தாம் முதலில் பாகிஸ்தானில்தான் ஆயுத பயிற்சி பெற்றேன் என்றும் எனக்கு இந்த பயிற்சியை  10 ஆண்டுகளுக்கு முன்பு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம்தான் கொடுத்தது என்றும் ஹெட்லி அந்த வாக்குமூலத்தில் மேலும் கூறியுள்ளான்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்