முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியுசிலாந்துக்கு உதவ தயார் - அமெரிக்க அதிபர்

வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,பிப்.25 - பூகம்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நியுசிலாந்து நாட்டுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்யத் தயார் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார்.  நியுசிலாந்து நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தில் 200 க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டார்கள். ஏராளமானோர் தங்கள் வீடு, வாசல்களை இழந்து விட்டனர். பல கட்டிடங்கள் தரைமட்டமாகி விட்டன. தற்போது அங்கு மீட்பு பணியும், நிவாரணப் பணியும் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகளில் தங்களாலான அனைத்து உதவிகளையும் நியுசிலாந்துக்கு செய்யத் தயார் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். முன்னதாக அவர் நியுசிலாந்து நாட்டு பிரதமர் ஜான் கியூடன் தொலைபேசியில் பேசினார். அப்போது நியுசிலாந்துக்கு மீட்பு குழுக்கள் சென்று கொண்டிருப்பதை அவர் நியுசிலாந்து பிரதமரிடம் தெரிவித்தார். இந்த இக்கட்டான நேரத்தில் நியுசிலாந்துக்கு தேவையான எந்த உதவியாக இருந்தாலும் சரி, அதை செய்ய அமெரிக்கா தயாராக இருக்கிறது என்று ஒபாமா உணர்ச்சிப்பூர்வமாக நியுசி. பிரதமர் ஜான் கியூவிடம் தெரிவித்தார். நியுசிலாந்து மக்கள் மற்றும்  அமெரிக்க மக்களிடையேயான நட்புறவை மேலும் வளர்க்க தாம் விரும்புவதாகவும் ஒபாமா தெரிவித்தார். இதற்கு நியுசிலாந்து பிரதமர் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்