முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்தில் புனரமைக்கும் பணி துவங்கியது

வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011      உலகம்
Image Unavailable

கிரைஸ்ட்சர்ச், பிப். 25 - பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட்சர்ச் நகரை புனரமைக்கும் பணிகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருவதாக அந்நாட்டின் பிரதமர் ஜான் கீ கூறினார். நியூசிலாந்து நாட்டின் 2-வது பெரிய நகரமான கிரைஸ்ட் சர்ச் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை ரிக்டர் அளவையில் 6.3 என்ற அளவுக்கு சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தில் வணிக வளாகங்கள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின.
இந்த நில நடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது என்று அரசு அதிகாரிகள் கூறினர்.
காணாமல் போன 300 பேரை  தேடி கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மீட்பு பணியில் ராணுவ விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் கிரைஸ்ட் சர்ச் விமான நிலையத்தில் தவித்த பயணிகள் ராணுவ விமானங்களில் பயணித்தனர்.
இடுபாடுகளை அகற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று  வருகின்றன.  சாலைகளை செப்பனிடுதல், தொலைத் தொடர்பு இணைப்புக்களை சரி செய்தல் புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
புனரமைக்கும் பணிக்கு போதுமான நிதி இருப்பதாகவும் இந்த பணிகள் விரைவில் முடிவடையும் என்றும்  நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ கூறினார்.
நியூசிலாந்து நாடு பூகம்ப மண்டலத்தில் இருக்கிறது என்பதும் இங்கு அடிக்கடி பூகம்பம் நிகழ்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்